நாடு முழுவதும் மின்சார விநியோகம் மீளமைப்பு! – மின்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதி

 



இலங்கையில் இன்று (17.10.2026) முற்பகல் ஏற்பட்ட நாடளாவிய மின்தடை காரணமாகப் பாதிக்கப்பட்ட மின்சார விநியோகக் கட்டமைப்பு மீளமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மின்கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் சுமார் 11.45 மணியளவில் மின்சாரக் கடத்தல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதனையடுத்து, மின்சார விநியோகத்தைப் படிப்படியாக வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மின்சாரக் கடத்தல் கட்டமைப்பு முழுமையாக மீளமைக்கப்பட்டுள்ளதாக இன்று மாலை 7.51 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

மின்தடையால் பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்புவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

மின்தடைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

BATTI MEDIA