மட்டக்களப்பு கல்லடியின் பெருமையை உயர்த்திய நிமால் ரஞ்சன் மதுஷா! – நடனத்துறையில் முதல் தர சிறப்பு நுண்கலைமாணி பட்டம் பெற்று சாதனை




 




மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த நிமால் ரஞ்சன் மதுஷா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் நடனத்துறையில் முதல் தரத்தில் (First Class) சிறப்பு நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ. குமாரவடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் த. வேல்நம்பி பட்டத்தை வழங்கி வைத்தார்.

நடனத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, முதல் தரத்தில் சிறப்பு நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ள நிமால் ரஞ்சன் மதுஷாவின் சாதனை, அவரது கல்வி மற்றும் கலைத்துறைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

இவரது இச்சாதனையைப் பாராட்டுவதுடன், எதிர்காலத்தில் கலைத்துறையில் மேலும் பல உயரங்களை எட்டிப் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.