கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் (Provincial Level English Language and Drama Competition), மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய மாணவன் சிவானந்தியன் உமாமணாளன் பிரபஞ்சன் 3-ம் இடத்தினைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கல்வியே மனிதனை உயர்த்தும் என்ற தொனிப்பொருளில் செயற்படும் சிவாநந்த வித்தியாலயத்தின் மாணவனான இவர், இப்போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் மட்டக்களப்பு கல்வி சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்





