சீன அரசினால் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஸ்கேனர் (MRI) இயந்திரத்தை, சந்தேகநபரான முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிரான்தி ராஜபக்ஷ தனது "சிரிலிய சவிய" அமைப்பினால் வழங்கப்பட்ட நன்கொடை போன்று சித்தரித்து, தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தியசாலைக்கு கையளித்துள்ளதாக நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜனரால் (Additional Solicitor General) சுட்டிக்காட்டியுள்ளார்.





