நாமல் ராஜபக்ஷவின் செயலாளரின் இல்லத்தில் சோதனை: கைப்பற்றப்பட்ட பாதுகாப்புப் பெட்டகத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

 


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்க என்பவருக்குச் சொந்தமான, கல்கிசை டெம்ப்ளர்ஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
​கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவல்களுக்கு அமைவாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிசை பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீவிர சோதனை சுமார் நான்கு மணி நேரம் நீடித்துள்ளது. இதன் முடிவில் அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டகம் (Safe) ஒன்றை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். எனினும், குறித்த பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறப்பதற்கான கடவுச்சொல் தன்னிடம் இல்லை என வீட்டின் உரிமையாளரான சஞ்சய சமரசிங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.