மாகாண ஆங்கிலப் போட்டியில் இரண்டாம் இடம்! – தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலய மாணவி!

 



மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழிப் போட்டியின் கவிதை கூறல் நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலய மாணவி R. இவாஞ்சலின் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவியின் இந்தச் சாதனையானது அவரது மொழித்திறன், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பறைசாற்றுவதுடன், பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இச்சாதனையைப் படைப்பதற்காக மாணவிக்கு வழிகாட்டி, பயிற்சியளித்த ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊக்கமளித்த அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தி, மேலும் பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைக்க மாணவி R. இவாஞ்சலினுக்கு BATTI MEDIA தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.