Zero Chance’: சட்டவிரோத கடல் பயணங்களுக்கு எதிராக மாணவர்களின் விழிப்புணர்வுக் குரல்

 




 சட்டவிரோத கடல் வழி பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய முயற்சிப்பது மிகவும் அபாயகரமான மற்றும் விவேகமற்ற ஒரு செயலாகும் எனும் முக்கிய விழிப்புணர்வுச் செய்தியை வலியுறுத்தி, நான்காவது வருடமாக நடத்தப்பட்ட ‘Zero Chance’ (ஏமாறாதிருப்போம் வழிதவறாதிருப்போம்) சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டியின் மாபெரும் விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் கோலாகலமாக இடம்பெற்றது. 

அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிக்கு, கடந்த வருடத்தின் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமான அனர்த்த சவால்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்திருந்தது. நாட்டின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 42 பாடசாலைகளிலிருந்து 1,036 சித்திரங்கள் மற்றும் 1,229 கட்டுரைகள் உள்ளிட்ட மொத்தமாக 2,265 ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கான விருது வழங்கும் விழாவின் போது, முதல் மூன்று இடங்களைப் பெற்ற 164 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்ற 55 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.