மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் இருத்தலியமும்_அரங்கும்" நூல் வெளியீட்டு விழா 2026


 
























































































மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் மகுடம் கலை இலக்கிய வட்டமும் இணைந்து நடத்தும் க.மோகனதாசனின் இருத்தலியமும் அரங்கும் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று   காலை 10:30 மணியளவில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் 
திரு .வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

 நிகழ்வானது ஆரம்பமானது முதல் நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல்  இந்நிகழ்வில் அதிகள் வரிசையில் முன்னிலை அதிதியாக பேராசிரியர் சி. மௌனகுரு ஐயா அவர்களும் பிரதம விருந்தினர் பேராசிரியர் சு.சிவரத்தினம் அவர்களும் சிறப்பு விருந்தினராக தவிசாளர் திரு. க. செந்தில்குமார் ஐயா, கௌரவ விருந்தினராக திரு.த. கணேசரெத்தினம் பீடாதிபதி தேசிய கல்வியக் கல்லூரி மட்டக்களப்பு  மற்றும் திரு.இ.  கனகசுந்தரம் ஓய்வு நிலை ஆசிரியர் மேலும் விரிவுரையாளர்கள்,கலைஞர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், என பலரும் கலந்து கொண்டனர் தொடர்ந்து விழா வரிசையில் மங்கலவிளக்கேற்றல், மௌன இறைவணக்கம்,  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட  விரிவுரையாளர் கலாநிதி பிரியதர்ஷினி ஜெகதீஸ்வரன்  அவர்களால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டது தொடர்ந்து திருமதி தர்மினி மோகனதாசன் அவர்களினால் வரவேற்புரையும் விழா தலைவரினால் தலைமையுரை இடம்பெற்றது 

அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் அறிமுகத்தினை இறைவரி பிரதி ஆணையாளர் நாயகம், மட்டக்களப்பு தமிழ்ச்சங்கப்  பொதுச் செயலாளர்  சட்டத்தரணி மு. கணேசராசா வழங்கி இருந்தார் அவர் கூறுகையில் நூலாசிரியர் பற்றிய வரலாற்றினையும் அவரது படைப்புகள், அவரது இலக்கிய, நாடக செயற்பாடுகள் முதலான விடயங்களை பற்றி குறிப்பிட்டு இருந்தார் தொடர்ந்து  சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சியாமளாங்கி கருணாகரன் அவர்களால் பாடல் பாடப்பட்டது 
மகுடம் வி.மைக்கல் கொலின் வெளியீட்டுரை ஆற்றினர் 
 அதனை அடுத்து நூல் வெளியீடு அந்தவகையில் முதல் பிரதியினை அறிவக வளாகம் கனடா, அரச உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்தியோகத்தர், ரொறொன்ரா கனடா   தமிழ் ஆசிரியர் திருமதி தாரணி தவராஜா பெற்றார் இரண்டாம் பிரதியினை பேராசிரியர் சி.மௌனகுரு  ஐயாவும் மூன்றாம் பிரதியினை பேராசிரியர் திரு க. சிவரெத்தினம் ஐயா தொடர்ந்து தமிழ்ச்சங்க தலைவர், தவிசாளர் திரு.க.செந்தில்குமார், பீடாதிபதி திரு. .த.கணேசரெத்தினம், சட்டத்தரணி திரு மு. கணேசராசா, கலாநிதி திருமதி பிரியதர்ஷினி, கலாநிதி சியாமளாங்கி, விரிவுரையாளர் பிரசாந்தி ,  கனகரெட்ணம் , எனக்கும், ஆசிரியர் கனகசுந்தரம் வருகை தந்த அழைப்பு அதிதிகள் என பலரும் பெற்றுக்கொண்டனர்

நூல் நயவுரை இடம்பெற்றது இதனை நுண்கலைத்துறை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி பிரசாந்தி இளங்கோ ஆற்றினார் அந்தவகையில் நயவுரையில் பல நூல்கள் இருந்தாலும் அவை சில சந்தேகத்திற்கு இடமான வகையில் அதன் விடயங்கள் அமைந்துள்ளது ஆனால் இந்த நூலானது  காத்திரமான நூல் என்றும் இதனை நூலின் அமைப்பு, நூலின் உள்ளடக்கம் , நூலின் தனித்துவம் , நூலின் முக்கியத்துவம் போன்ற நான்கு தலைப்பின் கீழ் நயவுரை செய்தார் தொடர்ந்து கௌரவ விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை, செல்வி தியட்ஷா ரவீந்திரன் அவர்களின் மழலை மொழியில் அருமையான கவிதையும் பிரதம விருந்தினர் உரை, மேலும் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டது பேராசிரியர் உரையில் நூலாசிரியர் மோகனதாசன் ஐயாவின் குடும்பத்திற்கு பேராசிரியருக்கு இடையான உறவு பற்றியும் நூல் பற்றியும் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆற்றினார் இறுதியாக நூலாசிரியரினால் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெற்றது அவர் வருகை தந்த அத்தனை உள்ளங்களையும் விழித்து உரையாற்றி இருந்ததோடு வருகை தந்த அத்தனை உங்களுக்கும் அவர் சார்பிலும் அவரது குடும்பம் சார்பிலும் மனப்பூர்வமான நன்றியினைத் குறிப்பிட்டு இருந்தார்.
 மட்டக்களப்பு தமிழ்ச்சங்க துணைச் செயலாளர் திரு. இரா. பிரதீஸ்காந்த் அவர்கள்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
 செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே என்னையும் இந்த நிகழ்விற்கு அழைத்த நூலாசிரியர் அன்புக்கும் மரியாதைக்குரிய அனைவரையும் மதிக்கும் பண்பும் பணிவும் மிகுந்த கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவகத்தின் முதுநிலை விரிவுரையாளர் திரு க. மோகனதாசன் ஐயாவிற்கு அவரது குடும்பத்தினருக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தினருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் 

#நூல்_பற்றி 
க. மோகனதாசன் ஐயா  படைப்புகளில் ஒன்றான இந்நூல்  ஐந்து அத்தியாயங்களை கொண்டது அந்தவகையில் 
1.இருத்தலியம் அறிமுகம் 
1.1.இருத்தலியம் என்றால் என்ன 
1.2.இருத்தலியம் குறித்த எண்ணக்கரு ஏன் அவசியமாகின்றது 
1.3.இருத்தலியம் சிந்தனை உருவான பின்னணி 
1.4.இருத்தலியல் கொள்கையின் முக்கிய கோட்பாடுகள் 
1.5. இருத்தலியல் தோற்றமும் வளர்ச்சியும் 1.6.இந்திய கலை இலக்கிய மரபில் இருத்தலியச் சிந்தனைகள் 
1.7.  தமிழ் சிந்தனை மரபில் இருத்தலியம் 
2.இருத்தலியல் சிந்தனையாளர்கள்..
3. இருத்தலியம்-கலை- இலக்கியம் ஒரு பார்வை 
4.அரங்கில் இருத்தலியம்
5. இலங்கைத் தமிழ் நாடக மரபில் ஹைடெக்கரின் 
போன்ற பொருளடக்கம் ஊடக பல விளக்கங்களை கொண்டு அமைந்துள்ளது 

மனிதனின் வாழ்வையும் அவன் தனிமையையும் சுதந்திரத்தையும் பிரக்ஞையோடு தொட்டுப் பார்க்கும் காரமாக இருத்தலியம் இயங்குகிறது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட புரட்சிகளால் உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன இது உலகப் போர்கள் ,பேரழிவுகள் ,நாசிசம் பாசிசம் போன்ற அரசியல் அடக்குமுறைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை மனிதனை இயந்திரத்தின் பகுதியாகவும் நுகர் பொருளாகவும் மாற்றிய சூழலில் மனித நேயத்தின் சிதைவுகளும் அது தந்த காயங்களிலிருந்து பூத்த சிந்தனை மரபாக இருத்தலியம் விளங்குகிறது.  இந்நூலில் இருத்தலிய தத்துவத்தின் அடிப்படை கருத்துகளான சுதந்திரம்,தேர்வு, பொறுப்பு அந்நியமாதல், அச்சம், தனிமை மற்றும் காலம் ஆகியவற்றை அரங்கியல் நோக்கில் அனுகுவதற்கான ஒரு முக்கியமான அறிவு பயணத்தை மேற்கொள்கிறது குறிப்பாக தத்துவமும் நாடகமும் இரு வேறுபட்ட துறைகள் என்ற வழக்கமான பிரிவைத் தாண்டி அவை மனித இருப்பை புரிந்து கொள்ளும் இரு முக்கியமான மொழிகளாக எவ்வாறு சந்திக்கின்றன என்பதை கவனத்தில் கொண்டு வருகிறது அந்த வகையில் அரங்கு மனித இருப்பின் கண்ணாடியாகவும் மனிதன் தன்னையே விசாரித்துக் கொள்ளும் தத்துவ வெளியாகவும் விளங்குகின்றது 

இருத்தலியம் எனும் பரந்த தத்துவக் கடலை அதன் தோற்ற பின்னணியில் இருந்து தொடங்கி மேலைநாட்டு தத்துவ வாதிகளின் சிந்தனைகள் இந்திய தமிழ் இலக்கிய மரபில் பதிந்துள்ள இருப்பியில் உணர்வுகள் மற்றும் கலை அரங்கு வடிவங்கள் அது பெற்றுள்ள பரிமாணங்கள் வரை மிக விரிவாகவும் நுட்பமாகவும் குறிப்பிடுகின்றது தத்துவம் சார் விடயங்களை குறிப்பிடப்பட்டுள்ளது 
இப்படி பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு நூலாக இந்நூல் அமைந்துள்ளது இவை நூல் பற்றிய சிறிய கருத்து மாத்திரமே நூலினை நன்கு கற்றால் அவை குறிப்பிடும் விடயங்களை அறிந்து கொள்ள முடியும் 

#நூலாசிரியர்_பற்றி 
அன்புக்கும் மரியாதைக்குரியவரும்  அனைவரையும் மதிக்கும் பண்பும் பணிவும் மிகுந்த கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.க.மோகனதாசன் அவர்கள் 
கிரான்குளம் எனும் பழம்பெரும் கிராமத்தில் கந்தசாமி+ கண்ணகி தம்பதிக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தார் இவர் கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலத்தில் ஆரம்ப மற்றும் உயர்கல்வியினை கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் 
இவர் அமைதியான சுபாவம் உள்ளவர் ஆனால் சிறு வயதில் இருந்து படிப்பில் நாட்டம் உள்ள கெட்டிக்காரர் இவர்  சிறு வயதிலேயே கவிதை பாடல்கள் போன்ற விடயங்களில் நாட்டம் கொண்டவர் தேசிய மட்டங்களில் பரிசில்களும் வென்றவர் 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தான் தெரிவு செய்து கற்ற சிறப்பு துறையில் இளமாணி பட்டத்தை முதல் வகுப்பு பட்டத்தோடு தங்க பதக்கமும் வென்றவர் 
மேலும் நாடகமும் அரங்கிலும் எனும் துறையில் இவர் ஒரு முது தத்துவமானி பட்டதாரியும் ஆவார் 
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி விரிவாளராக 2005இல் இணைந்து கொண்டவர்  
வருகைதரு விரிவுரையாளராகவும் இரண்டாம் தர சிரேஷ்ட விரிவுரையாளர், முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளர் என பதவி உயர்வு பெற்ற இவர் ஒரு கல்வியாளராக தன்னை நிலை நிறுத்திக் உள்ளார் 

தனது தொழிற்சார் தகமையை உயர்த்தும் வகையில் ஆய்வுத்துறையில் பல்வேறு ஆக்கங்களை படைத்துள்ளார் குறிப்பாக 

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி 
நினைவுப் பேருரை,
சிறுவர் கதை சொல்லல் தேவைகளும் சவால்களும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ,
மதங்க சூளாமணியும் ஷேக்ஸ்பியர் நாடகங்களும் ஆராய்ச்சி மாநாடு,
பாரம்பரிய சடங்குகளில் இசை சிலப்பதிகார கானல்வரியை மையமாகக் கொண்ட சிறப்பு பார்வை,
தமிழ் இசையில் நாட்டுப்புற இசையின் பங்கு, 
பிரதி எழுதலில் இருமைகளின் செல்வாக்கு பின் அமைப்பியல் சார்ந்த ஆராய்ச்சி பார்வை,
சிறுவர் ஆளுமை விருத்தியல் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களின் வகிபங்கு,
கூத்தினை அரங்க விளையாட்டுகளில் பிரயோகித்தல் செயல்மை ஆய்வு ,
பாரம்பரிய விளையாட்டுக்களை அரங்க விளையாட்டுகளாக மாற்றுதல் ,
தமிழ் கணித முறமையும் யாழ் நூலும் யாழ் நூல் பழைய திரிபுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு,

இவர் புதுமை மற்றும் படைப்பாற்றலுக்கான செயற்பாடுகள், 
பாரம்பரிய கலை வடிவங்களில் தேர்ச்சி, தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிக்கான நடன அமைப்பு மற்றும் இசையமைப்பு போன்றவற்றை மேற்கொள்ளல் , 
குரல் வளம் குரல் ஏற்ற இறக்கம் மற்றும் தெளிவான உச்சரிப்பு போன்றவற்றுக்கான பயிற்சி வழங்குனர்,
 பட்டறைகள் நடத்துவதிலும் மாணவர்களுக்கு வழி காட்டுவதிலும் அனுபவமும் அதீத ஈடுபாடு உடையவர் ஆவார் 

இவருக்கு கலையும் தொடர்பாடலும் 
தமிழரின் பாரம்பரிய கலை வடிவங்கள், இசை நாடகம், பாரம்பரிய நாடகமும் புதிய உருவாக்கமும் ,கல்வியில் நாடகம் நவீன நாடகவியல் கோட்பாடுகள் என்பன  விருப்பத்திற்குரியவையாகும் 

இவர் இதுவரையில் பல நூல்களை எழுதியுள்ளார் அந்த வகையில் 
1. காக குஞ்சுகளின் ஊர்வலம் எனும் கவிதை தொகுப்பு , 
2.கூத்தின் முழு உருவாக்கம் 
3. கலையில் நவீனம் 
4.தகவல் தொடர்பான அடிப்படைகள் 
5.இத்தலியமும் அரங்கும் முதலானவற்றை படைத்துள்ளார் 

மேலும் தமிழ் நாடக வடிவை உருவாக்கும் பணியில் ஓய்வுநிலை பேராசிரியர் மௌனகுரு ஐயாவுடன் சுமார் ஒரு மாத காலம் நோர்வேயில்  பணியாற்றிய அனுபவம் கொண்டவர் 

இன்று  கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நல் விளைச்சலாய் நம் முன்னிற்பவர் இவராவார் .
மேலும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விவேகானந்த அழகிய கற்கைகள் நிர்வாகத்தின் முதுநிலை விரிவுரையாளராக சிறப்பாக பணியாற்றும் மோகனராசன் எப்போதும் புதிது புனைதலில் நாட்டம் உள்ளவர் அவரது ஆடல் நிலம் ஈழத் தமிழர்களது தனித்துவ ஆடல் முறையின் புதிய பாய்ச்சல் ஆகும் இத்தகைய சிறப்புகளை கொண்ட மதிப்புக்குரிய
 திரு. க. மோகனதாசன் ஐயாவின் படைப்புகள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

சிலப்பதிகாரக் கலைச்சுடர் ,
முத்தமிழ்க் காவலர் 
தேவ சுகிர்தராஜ்     &  செய்தியாசிரியர்