2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மட்/புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் முதலிடத்தைப் பெற்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்ற அகர்வின், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றதுடன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களில் நான்காவது இடத்தையும் தனதாக்கியுள்ளார்.
அகர்வின் பெற்றுள்ள இந்தச் சிறப்பான பெறுபேறு, அவரது பெற்றோர், பாடசாலை சமூகம், அவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆகிய அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
மட்டக்களப்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஆனந்தநாயகம், { ஓய்வு நிலை கலால் பரிசோதகர்,} மற்றும் திருமதி நளாயினி, ஆசிரியை – மட்/மகாஜன கல்லூரி ஆகியோரின் புதல்வரே மாணவன் அகர்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறை மட்/புனித மிக்கேல் கல்லூரியிலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 62 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர்.
மாணவன் அகர்வின் 175 புள்ளிகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, அவருக்கு தொடர்ச்சியான வழிகாட்டலையும் ஊக்கத்தையும் வழங்கிய ஆசிரியர் S. கங்காதரன் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ள மாணவன் அகர்வின், எதிர்காலத்திலும் கல்வித்துறையில் சிறந்து விளங்கி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளையும், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளையும் பெற்று, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.


-Edited.jpg)





