மட்டக்களப்பு ஆரையம்பதியில் பரபரப்பு ..கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

 


 மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்க்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான திங்கட்கிழமை (7) ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.