மட்டக்களப்பு ESOFT Metro Campus புதுப்பொலிவுடன் திறந்து வைப்பு!

 


 






































































புதிய வகுப்பறைகள், நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், வெளிநாட்டுக் கல்விக்கான தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம்

மாணவர்களுக்கான நவீன கல்வி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மட்டக்களப்பு ESOFT Metro Campus வளாகம் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பொலிவாக நேற்றைய தினம்  (22.10.2026) பிரம்மாண்டமாகத் திறந்து வைக்கப்பட்டது.

விசாலமான இடப்பரப்பு, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், புதிய பாடநெறிகள் மற்றும் சேவைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இவ்வளாகம், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாண மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த விரிவாக்கத்தின் கீழ், மேலதிக வகுப்பறைகள், நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதற்கான தனியான Study Abroad Division, மாணவர்களின் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான கூரைத் தள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற நவீன சூழலை உருவாக்குவதன் மூலம், மாணவர்கள் தமது கல்விப் பயணத்தை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இவ்விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

இத்திறப்பு விழாவில், ESOFT நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி தயான் ராஜபக்ஷ, மட்டக்களப்பு ESOFT கிளை முகாமையாளர் திருமதி சரண்யா லவப்பிரதன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் டாக்டர் எம். ஏ. நபீல் (Dr. M. A. Nafeel), மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் தயானந்தன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரவணபவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, பேராசிரியர் எப். பாரதி கென்னடி உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றன. வரவேற்புரைகள், சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனிடையே, ESOFT வளாகத்தில் Bingxue Tea & Ice Cream விற்பனை நிலையமும் நேற்றைய தினம்  கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் மாத்திரமன்றி, அங்கு வருகை தரும் பொதுமக்களும் புதிய உணவு மற்றும் பான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நவீன கற்றல் சூழலை உருவாக்குதல், வெளிநாட்டுக் கல்வி தொடர்பான வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் ESOFT Metro Campus இன் வளர்ச்சிப் பயணத்தில், இந்தப் புதிய விரிவாக்கம் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பில் உயர்கல்வி மற்றும் தொழில்சார் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தும் இத்தகைய முயற்சிகள், கிழக்கு மாகாண இளைஞர்கள் தமது எதிர்கால இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான புதிய பாதைகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.