ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசம்...
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அக்கரைப்பற்று RKM மகாவித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக திரு. தங்கராசா இராசநாதனும், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக திரு. பேரின்பராஜா திலகராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார் அவர்களினால் உரிய அதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வலயக் கல்விப் பணிப்பாளரின் முன்னிலையில் குறித்த இரு அதிபர்களும் தத்தமது பாடசாலைகளின் பதிவேட்டில் கையொப்பமிட்டு, தங்களது புதிய பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
புதிய அதிபர்களுக்கு கல்விச் சமூகத்தினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


.jpeg)

.jpeg)




