முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கிப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கிப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்தல் வழங்கியுள்ள நிலையிலேயே இவரது இந்தத் திடீர் வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





