பன்முக ஆளுமையான ஆரையூர் அருள் அவர்களும் முத்தமிழின் அங்கமான நாடகத் துறையில் அவர்களின் பங்களிப்பும்


 


 

 திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம்.
பிரதேசசெயளாளர்,
சட்டத்தரணி-  மட்டக்களப்பு

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நகரில் இருந்து சிறுவயதில் இருந்தே இலக்கியச் செயற்பாடுகளில் தென்பால் அமைந்துள்ள இயற்கை வனப்புடன் கூடிய ஈடுபட்ட இவர் கலை இலக்கிய செயற்பாடுகளின் பழம் பெரும் கிராமம் ஆரையம்பதி ஆகும். இக்கிராமம் வளர்ச்சிக்கும், தாக்கத்திற்கும் பாடசாலைக் மட்டக்களப்பிலுள்ள ஏனைய கிராமங்களுக்கு காலங்களில் பங்குபற்றிய போட்டிகள், மாணவர்மன்ற முன்னுதாரணமாக பண்பாட்டின் தொட்டியாகவும் செயற்பாடுகள் போன்றன இவரது கலை கலைகளின் இருப்பிடமாகவும் விளங்குகின்றது. இலக்கியத்துறை வளர்ச்சிக்கு உந்து சக்கியாக தனக்கென்றொரு பண்பாட்டு பாரம்பரிய கலாசார அமைந்தது. விழுமியங்களை கொண்டு விளங்குவதுடன் பாரம்பரிய கலை வடிவங்களான கூத்து, மகிடிக்கூத்து என பல பாரம்பரிய கலை வடிவங்களையும் நவீன நாடக வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்குகின்ற கிராமமாகவும் ஆரையம்பதி காணப்படுகின்றது. இவ்வாறாக முன்னெடுப்பிற்கு பல ஆளுமைகளின் தொடர்ச்சியான இருப்பும் செயற்பாடுகளுமேயாகும். இவர்களில் முதன்மைச் சாதனையாளராக குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒருவராகவே ஆரையர் அருள் விளங்குகின்றார். இவருடைய கலைப் பயணங்களில் குறிப்பாக நாடகச் செயற்பாடுகளின் தனித்துவங்களை சான்றுபகர முடியும்.
அவர்கள் 1949.09.19ம் திகதி மூத்ததம்பி அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை ஆரையம்பதி இராமகிருஷ்ண மிசன் பாடசாலையில் ஐந்தாம் தரம் வரை கற்று பின்னர் ஆறாம் தரம் தொடக்கம் உயர்தரம் வரை சிவானந்தா வித்தியாலயத்தில் கற்றார். இவர் பாடசாலைக் காலங்களில் இருந்தே கலைச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியும் கலைச் செயற்பாடுகள் அனைத்தும் இயல்பாகவே இவருள் இருந்தமை இவரது விசேட திறமையாகவும் விளங்குகின்றது. ஐந்தாம் தரம் படிக்கும் போது ஒரு போட்டிக்காக முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய கவிதையை எழுதி முதலீடம் பெற்றார். எனவே
இவரது துறைகளாக இலக்கிய செயற்பாடுகள், நாடகச் செயற்பாடுகள், பாரம்பரிய அரங்கச் செயற்பாடுகள் என பல துறைகளில் ஈடுபட்டு பன்முக ஆளுமையாளராக விளங்குகின்றார். இவர் நடிகர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பயணித்துக் கொண்டு இருக்கின்ற தொடர் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று மேலைத்தேய கோட்பாடுகளையும் அவர்களது சிந்தனைகளையும் தெரிந்து வைத்திருக்கின்ற அளவிற்கு எமது மாவட்டத்தில் இன்றும் கண்முன்னே வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலை இலக்கிய செயற்பாட்டாளரான ஆரையூர் அருள் பற்றிய புரிதலும் அவர் பற்றிய தேடல்களும் குறைவாகவே காணப்படுகின்றது. பன்முக ஆளுமையாளரான அருள் பற்றிய பல தரப்பட்ட ஆய்வுகள் வெளிவர வேண்டும் வெளிவரும் போது தான் அருளம்பலத்தின் கலை இலக்கிய செயற்பாடுகள் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படும் என்பது திண்ணம்.
காத்திரமான பல்வேறு கலை இலக்கிய செயற்பாடுகளுக்கும் சொந்தக்காரர் ஆரையூர் அருள் அவர்களின் நாடகச் செயற்பாகள் பற்றி எடுத்து நோக்குவது இன்றியமையாததாகும். இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடிகராக  இணைந்து செயற்பட்டு பல நாடகங்களில் பல மற்றும் வரலாற்று நாடகங்களான சிலைகளும் பாத்திரங்களை தாங்கி நடித்து பார்வையாளர்களின் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடகமும் "மாயவேட பாராட்டுக்களையும் பெற்றார். தனது நடிப்பாற்றல் மன்னன்" வரலாற்று நாடகம் போன்றவற்றையும் திறமையை வெளிக் கொண்டுவந்த ஆரையூர் எழுதியுள்ளார். அருள் நாடகங்களை தானே எழுதுகின்ற நாடக ஆசிரியராகவும் மிளிரத் தொடங்கினார்.
இவரது நாடகங்களை சமூக நாடகம். சிறுவர் நாடகம், இதிகாச நாடகம், புராண நாடகம், நகைச்சுவை நாடகம், வரலாற்று நாடகங்கள் என வகைப்படுத்தி நோக்கலாம்.
ஆரையூர் அருள் அவர்களால் எழுதப்பட்ட சமூக நாடகங்கள் இவரது காலப் பகுதியில் சமூகங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் மையப்படுத்தியதாகவே அமைகின்றன. இவரால் எழுதப்பட்ட சமூக நாடகங்களாக "சமர்ப்பணம், நல்லதம்பி, புதியவிதி சமைப்போம். அளவான குடும்பம், பெரியோரை கனம் பண்ணுவோம், தியாக தீபம், இணைந்த இதயங்கள் போன்ற நாடகங்களைக் குறிப்பிடலாம்.
சிறுவர் நாடகங்களையும் சிறுவர்களது மனநிலைக்கு ஏற்ப அவர்களது கற்பனைத் திறனுக்கு ஏற்ப நாடகங்களை எழுத வேண்டும். சிறுவர் நாடகம் எழுதுவதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. அவற்றை சவாலாக ஏற்று சிறுவர்களுக்கு உரிய வகையில் சிறுவர்களுக்கு சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறுகின்ற நாடகங்களாக இவரது சிறுவர் நாடகங்கள் விளங்குகின்றன. இவரால் எழுதப்பட்ட சிறுவர் நாடகங்களாக "ஒரே தாய்பிள்ளை. மரவளம் வளர்ப்போம், கல்வியே கலங்கரை விளக்கு, முயற்சியே திருவினையாக்கும், கல்வி அழகே அழகு, உண்மை விளங்குது" போன்ற சிறுவர் நாடகங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதிகாச மற்றும் புராண நாடகங்கள் -குந்தியின் வரம்" ஊர்வசி பெற்ற சாவம் "இறைநம்பிக்கை" போன்ற இதிகாச புராண நாடகங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி நகைச்சுவை
ஆரையூர் அருள் அவர்களது மேற்கூறப்பட்ட நாடகச் செயற்பாடுகளை வைத்துப் பார்க்கின்ற போது ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை படம் போட்டுக் காட்டுகின்றது. இவரது நாடகப் பிரதிகள் ஒவ்வொன்றும் கற்றலுக்கும் ஆய்வுக்கும் உரியவை. இப்பிரதிகள் பிரதேச ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பன்முக ஆளுமையாளராக விளங்குகின்ற ஆரையூர் அருள் அவர்களின் கலை இலக்கிய செயற்பாடுகளை பாராட்டி அவர்களுக்கு பல்வேறுபட்ட விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கை அரசின் அதியுயர் விருதான கலாபூசன விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்குகின்றபோது ஆரையூர் அருள் அவர்கள் ஈழத்தமிழர்களின் பண்பாட்டு நடைமுறைகளுக்கும் அப்பண்பாடு இன்றும் உயிர்நாடியாக இருப்பதற்கும் உரிய செயற்பாட்டினை தனது கலை இலக்கியச் செயற்பாட்டின் ஊடாகவும் நாடகச் செயற்பாட்டிற்கூடாகவும் புரிந்துள்ளார் என்பதோடு
பன்முக
ஆளுமையாளராகவும் இன்றுவரையும் தொடர் செயற்பாட்டாளராகவும் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இவரது செயற்பாடுகள் அனைத்தும் வருங்கால தலைமுறைகளுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிழக்கு மாகாணத்தின் முதன்மை சாதனையாளரான ஆரையூர் அருள் அவர்களின் கலை, கலாசார். பண்பாட்டு செயற்பாடுகள் மேலும் தொடரட்டும்.