கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் 29.10.2026 அன்று 11.30 மணியளவில் ‘உலக அரங்க வரலாறுசார்ந்த அரங்கக் கட்டுமானங்களைக் காட்சிப்படுத்தலும் கலந்துரையாடுதலும்’ எனும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு நுண்கலைத்துறையின் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஷ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிழ்வைச் சிறப்பித்தார்.
இந்தக் கண்காட்சியானது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுந்தரலிங்கம் சந்திரகுமார் அவர்களின் ‘ஆற்றுகைமையக் கற்றல்’ எனும் எண்ணக்கருவின் ஒரு வெளிப்பாடாக அமைந்திருந்தது. ‘உலக அரங்க வரலாறு’ எனும் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு படைப்பாக்கத்திறன், சுய ஆக்க வெளிப்பாடு, விமர்சனத்திறன், தலைமைத்துவ ஆற்றல் போன்றவற்றை முன்நிலைப்படுத்துவதில் இந்த ஆற்றுகைமையக் கற்றல் முறைமை பெரிதும் துணைபுரிகின்றது. இதனை வலுப்படுத்தும் நோக்குடன் உலக அரங்கின் பண்பாட்டு அடையாளத்தில் மேம்பட்ட அரங்கக் கூறுகளையும், அதன் வடிவங்களையும், அதிலுள்ள ஆற்றுகைப் பண்புகளையும் வெளிப்படுத்தும் போக்கை மையப்படுத்தி கலாநிதி சந்திரகுமாரின் வழிப்படுத்தலில் இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு மாணவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்த மாணவர்களால் வித்தியாசமான முறைமையில் ஒரு மாத காலமாகத் தயாரிக்கப்பட்டு வடிவம் பெற்றது. இந்த உலக அரங்க வடிவங்களின் கண்காட்சியில் அரங்கக் கட்டுமாணங்களைத் தயாரித்த மாணவர்களுக்குப் படைப்பாக்க ஆற்றலை வழங்கியதுடன், அவர்கள் அதனைப் பார்த்துக் கற்று உணர்வதை அறியமுடிந்தது.
பாடசாலையில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் இந்த அரங்க வடிவமைப்பின் கண்காட்சியில் ஈடுபட்டு தமக்கான மேலதிக விளக்கத்தினைப் பெற்றுக்கொண்டமை கற்றலின் பாய்சலாக அமைந்திருந்தது. பல்கலைக்கழகமும் சமூகமும் இணைந்துகொள்வதன் விரிவாக்கத்தை இது சுட்டியது. பரீட்சைமையக் கற்றலில் தம்மைத் தயார்படுத்தும் பொழுது மாணவர்களுக்குக் கண்ணூடே பார்த்து, மகிழ்ந்து கொண்டாடுவதற்கும் நினைவில் இருத்துவதற்குமான வெளியையும், மாணவர் ஊடாட்டத்தையும் இது ஏற்படுத்தியது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)





