கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு 63 ஆவது நிகழ்வு: ‘முப்பத்தியெட்டாம் கொலனி’, ‘முயலாமை’ நூல்கள் வெளியீடு

 




கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டின் 63 ஆவது நிகழ்வாக, திரு. ம. வேதநாயகம் அவர்களின் ‘முப்பத்தியெட்டாம் கொலனி’ குறுநாவல் வெளியீட்டு விழாவும், திருமதி சுந்தரமதி வேதநாயகம் அவர்களின் தேசிய விருது பெற்ற ‘முயலாமை’ சிறுவர்கதை நூல் அறிமுக நிகழ்வும் கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆன்மீக விருந்தினராக நாவற்கprivடா ஸ்ரீ கங்காணிப்பிள்ளையார் ஆலய பிரதமகுருக்கள் சிவஸ்ரீ உ. ஜெயகிருஷ்ணா கலந்து சிறப்பித்தார். முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ சிவம் பாக்கியநாதன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு. நா. தனஞ்செயன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய சுவடிக்கூடத் திணைக்களப் பணிப்பாளர் திரு. சி. புவனேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கௌரவ விருந்தினர்களாக மக்கள் வங்கி ஓய்வூதிய சங்கத் தலைவர் திரு. பி.எஸ். ஜெயந்திரா, செயலாளர் திரு. எஸ். யோகராஜா, ஆலோசகர் திரு. கு. குலேந்திரராசா, மாவட்ட ECCD இணைப்பாளர் திரு. வீ. முரளிதரன், நடராஜர் சைவசித்தாந்த பயிற்சி மைய தலைவர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம், சைவ மங்கையர் கழகத் தலைவர் திருமதி திலகவதி ஹரிதாஸ், ஓய்வுநிலை அதிபர் சைவப்புலவர் மனோன்மணி தட்சணாமூர்த்தி, ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி மலர்தேவி குருபரன்,  ஃபைன் ஆர்ட்ஸ் கழக தாபகரும் சினிமா தயாரிப்பாளருமான திரு. தேவ அலோசியஸ், மற்றும் நாவற்குடா தருமரெட்ணம் வித்தியாலய அதிபர் திருமதி சுமதி பத்மநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் வரவேற்பு நடனத்தை செல்வி ருத்திரன் ரித்திக்கா மற்றும் செல்வி ருத்திரன் கிஷானுக்கா ஆகியோர் வழங்கினர். பொருளாளர் திரு. சி. சுதேஸ்வரன் வரவேற்புரையாற்ற, கவிஞர் ஜீ. எழில்வண்ணன் நூல் ஆசிரியர்களை அறிமுகம் செய்துவைத்தார். நூல்களின் முதற்பிரதிகளை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. றஞ்சிதமூர்த்தி மற்றும் ஓய்வுநிலை அதிபர் சைவப்புலவர் விஜயலெட்சுமி இராமச்சந்திரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நயவுரைகளை கதிரவன் பட்டிமன்றப் பேரவை இணைப்பாளர் பாலமீன்மடு இரா கலைவேந்தன் மற்றும் செயலாளர் கவிஞர் அழகு தனு ஆகியோர் ஆற்றினர். நூலாசிரியர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து, கழகச் செயலாளர் புதுவையூர் பு. தியாகதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை உபதலைவர் சோலையூரான் ஆ. தனுஸ்கரன் தொகுத்து வழங்கினார்