ஏறாவூர் இளம் எழுத்தாளர் கே.ஆர். ஆஷிகுர் றஹ்மானுக்கு 'Young Writer Excellence Award' வழங்கி கௌரவிப்பு!




மூதூர் JMI நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூதூர் எக்ஸ்போ 2026’ (Mutur JMI Expo - 2026) நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் நாள் விருது வழங்கும் விழாவில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் கே.ஆர். ஆஷிகுர் றஹ்மான் அவர்களுக்கு சிறந்த இளம் எழுத்தாளருக்கான “Young Writer Excellence Award” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே எழுத்துத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தனது படைப்புக்களூடாகச் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் அவரது திறமையையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையிலேயே JMI நிறுவனத்தால் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.