மருத்துவ சிகிச்சைகளுக்காக எனத் தெரிவித்துச் சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, அங்குள்ள பிரபல வர்த்தக வளாகம் ஒன்றில் உலா .

 


மருத்துவ சிகிச்சைகளுக்காக எனத் தெரிவித்துச் சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, அங்குள்ள பிரபல வர்த்தக வளாகம் ஒன்றில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவலான விவாதங்களைத் தோற்றுவித்துள்ளன.
​நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் (FCID) அழைப்பாணைகள் மற்றும் விசாரணை விவகாரங்களுக்கு மத்தியில் அவர் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், '313@Somerset' பேரங்காடியில் அவர் காணப்படும் புகைப்படங்களை மேற்கோள்காட்டி "ஒருவேளை மருந்து வாங்கச் சென்றிருப்பாரோ...?" எனப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
​அரசியல் ரீதியான விசாரணைகள் மற்றும் தனிப்பட்ட விஜயங்கள் தொடர்பில், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இப் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வ விளக்கங்களை எதிர்பார்ப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.