முச்சக்கர வண்டி (Three-wheeler) ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவோம். நீங்கள் பாடசாலையை விட்டு வெளியேறியவுடன், ஒரு முச்சக்கர வண்டியை வாங்கி, உடனடியாக வீதிகளில் ஓட்டத் தொடங்க முடியாது.”
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறுகையில், நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, இளைஞர்கள் எளிதான வருமானம் ஈட்டும் வழியாக முச்சக்கர வண்டி ஓட்டுதலை அதிகளவில் தெரிவுசெய்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படுகிறது





