மட்டக்களப்பு மகிழடித்தீவு சித்தி விநாயகர் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் அனுவுருத்திரன்-வசந்தசுந்தரி திருமணம் கரகம் அரங்கேற்று விழா .













இன்றைய தினம் எமது மகிழடித்தீவு மண்ணில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கரகம்      அரங்கேற்றம்    22.08.2026 சனிக்கிழமை    .     செய்யப்பட்டது இந்த நிகழ்வானது மகிழடித்தீவு கண்ணகி கலை மன்ற தலைவர் திரு.த.கரதூசனன்  அவர்களில் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வின் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஞா.ஸ்ரீநேசன் ஐயா அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் என பலர் கலந்து கொண்டனர் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் பின்னர் மங்கல விளக்கேற்றல் அதனைத்தொடர்ந்து இறைபாராயணம் செல்வன் சு. சபிஸ்ரன் அவர்களால் இசைக்கப்பட்டது தொடர்ந்து ஆசியுரை சிவஸ்ரீ. தேவ சுகிர்தராஜ் ஐயா அவர்களால் (என்னால் ) ஆற்றப்பட்டது பின்னர் கலை மன்ற உறுப்பினர் திரு.ந.அன்னகேசரி  அவர்களால் வரவேற்புரையும் கண்ணகி கலை மன்ற தலைவர் அவர்களால்  தலைமையுரையும் இடம்பெற்றது 
பின்னர் நாடக ஆசிரியர்
 கலைஞர்  பீதாம்பரம் ஐயா அவர்களின் நெறியாள்கையிலும் மத்தள ஆசிரியர், பின்னணி பாடகர்கள் ஒத்துழைப்புடனும் கண்ணகி கலை மன்றத்தால் புதிதாக பழக்கப்பட்ட அனுவுருத்திரன் வசந்தசுந்தரி திருமணம் கரகம் ஆற்றுகை செய்யப்பட்டது பல கிராமங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர் கரகம் ஆற்றுகை செய்த சிறுவர்களுக்கு அவர்களால் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது  கரக இடைவேளையில் அதிதிகள் உரை இடம்பெற்று தொடர்ந்து கலைஞர் கௌரவிப்பும் பின்னர் மீண்டும் கரகம் ஆற்றுகை செய்யப்பட்டது 
இறுதி நிகழ்வாக மன்ற செயலாளர் திரு.த.சசிகாந்தன் அவர்களின் நன்றியுரையுடன் அரகேற்று விழா இனிதே நிறைவுற்றது 

#கரகம் என்ற கலைவடிவம் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகும் இது #குடக்கூத்து என்ற ஆடல்வகையை சார்ந்தது என கருதப்படுகிறது அந்த வகையில் குடக்கூத்து என்பது புராணக் கதையின் படி கிருஷ்ண அவதாரத்தில் கம்சனின் அரண்மனையில் கிருஷ்ணன் குடத்தை தலைக்கு மேல் வைத்து ஆடியதாக கூறுகின்றன 
மேலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய கால இலக்கியமான ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான #சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகையான ஆடற்கலைகளில் #குடக்கூத்து ஒன்றாக குறிப்பிடப்படுகிறது இந்த குடக்கூத்து என்ற வடிவமே இன்றைய கரகாட்டத்தின் ஆதி வடிவமாக கருதப்படுகிறது மற்றும் தமிழர் பாரம்பரிய வழிபாட்டில் கரகம் முக்கிய பங்கு வைக்கும் ஒரு கலை வடிவமாகும் குறிப்பாக மாரியம்மன், கண்ணகை அம்மன், திரௌபதி அம்மன் முதலான தெய்வங்களை மகிழ்விக்கும் ஒரு கலைவடிவம் கரகம் ஆகும் மாரியம்மன் தாலாட்டு பாடல்களின் 
மூன்று கரகம் அம்மா முளித்தாடும் பொற்கரகம் , 
ஐந்து கரகம் அம்மா அசைந்தாடும் பொற்கரகம்,
ஏழு கரகம் அம்மா எடுத்தாடும் பொற்கரகம், பத்து கரகம் அம்மா பதிந்தாடும் பொற்கரகம் என கரகத்தின் சிறப்பினை எடுத்து இயம்புகிறது இத்தகைய சிறப்பு வாய்ந்த கரகத்தினை பழக்கி என்னையும் நிகழ்வுக்கு அழைத்த கண்ணகி கலை மன்றத்தினருக்கும் கரக குழுவினர்களுக்கும் பங்குகொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தங்களது கலை செயற்பாடுகள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 
இறையருள் நிறைந்து இன்பமே சூழ்க 

சிலப்பதிகாரக் கலைச்சுடர்,
 முத்தமிழ்க் காவலர் 
சிவத்திரு.தேவ சுகிர்தராஜ்
மகிழடித்தீவு