கலாபூஷணம் ஆரையூர் மூ.அருளம்பலம் அவா்களின் பக்தி இலக்கியப் படைப்புக்கள் ஓர் விமா்சனப்பார்வை.

    

 

 கலாநிதி. பிாியதா்ஷினி ஜெதீஸ்வரன் 
முதுநிலை விாிவுரையாளா்,
இசைத்துறை ,
சுவாமி விபுலாநந்தா
அழகியல் கற்கைகள் நிறுவகம் ,
கிழக்குப் பல்கலைக்கழகம் ,இலங்கை
               
 
    
                            ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மண்முனைப்பற்று
பிரதேச சபைப்பிாிவுக்கு உட்பட்ட ஆரையம்பதியைச் சோ்ந்த ஓய்வு நிலை அதிபரும் கவிஞரும்
எழுத்தாளருமாகிய செம்மொழிப் புலவா் ஆரையூர் மூ.அருளம்பலம்            அவா்கள்  ஓர் கலை
இலக்கியச் செயற்பாட்டாளராவார். தனது வாழ்நாளில் கல்விப்பணியை சிரமேற்கொண்ட அவா் தன்
பிரதேசமாகிய மட்டக்களப்பின் பாரம்பாியக் கலைபண்பாட்டு விழுமியங்களை             பேணிப்
பாதுகாப்பதோடு மட்டுமன்றி அதன் மரபுமாறா புதிய ஆக்கங்களைப் படைக்கும் ஓர்
படைப்பாளியுமாவார். இயல் இசை நாடகம் என பல்துறை சார்ந்த அவரது படைப்புக்கள் கவிதை
, சிறுகதை, கட்டுரைகள், நாடகங்கள் , வில்லுப்பாட்டுக்கள் ,கூத்துக்கள் ,பக்தி இலக்கியங்கள்
என விாிந்துசெல்வன. ஏறத்தாழ அறுபது வருட கலை இலக்கியப் பயணம் அவருடையது. அப்
பெருமை மிக்க பெருந்தகையை அவரது எழுபத்தைந்தாவது அகவை நிறை நன்னாளில் வாழ்த்தி
இப் பவளவிழா மலருக்கு இக் கட்டுரையை வரைவதில் பேருவகை அடைகிறேன்.

இலக்கியங்களை காலக்கண்ணாடி என்பா். தன் வரலாறு தொியாத அல்லது போற்றிப் பாதுகாக்கத்
தவறிய சமுகம் தன்னைத் தக்கவைக்க முடியாத ஓர் நிலையில்லா சமுகமாகும் . அந்தவகையில்
நம் தொல் தழிழ்க் குடிகள் தீர்க்கதாிசனம் மிக்க சமுகமாக வாழ்ந்திருப்பதும் தம் வரலாற்றின்
செழுமையினை       இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் கட்டிடங்களிலும்
பதித்துச் சென்றிருப்பதும் இன்று எம் வரலாற்றை அறியவும் அதன் தனித்துவங்களையும் மேலும்
பிற சமுகங்களிலிருந்த கொண்டவற்றையும் கொடுத்தவற்றையும் கண்டறியவும் வழிசமைத்துள்ளது.

                        இலங்கையின்   கிழக்குப் பிரதேசம்  மானிடவியலாளா்களின்   ஓர்
ஆய்வுச்சுரங்கம். அதனைத் தவிர்த்து இலங்கையின் வரலாற்றை குறிப்பாக தமிழா் வரலாற்றை
எழுதிவிட முடியாது. இங்கு காலத்திற்குக்காலம் வந்தேறிய இந்திய குடிகளும் பட்டாணிகளும்
மேலைநாட்டவரும் கிழக்கின் பூர்வீக குடிகளுடன்    பண்பாட்டாலும் இனக்கலப்பினாலும் விட்டுச்
சென்ற தொன்மங்கள் இன்றுவரை இனங்களாகவும் மதங்களாகவும் காணப்படுகிறன .அந்தவகையில்
கிழக்கு பிரதேச சமுகம் ஓர் பன்மைத்துவ பண்பாட்டைக் கொண்ட சமுகமாகும். இங்கு வாழும்
சைவமக்கள் ஆகமவழிபாடுகளைப் பின்பற்றினாலும் தம் வழிபாட்டு முறைகளிலும் வாழ்வியல்
நெறிகளிலும் பூர்வீக மக்களின் பண்பாடுகளை சடங்குகளாக இன்றுவரை நம்பிக்கையுடன்

பேணிப் பாதுகாத்து  வருவதை  கண் கூடாகக் காணலாம்.  இங்குவாழும்  வேடா்கள் எனும்
பழங்குடி மக்கள் தம் வாழ்வியலில் தமக்கென குமாரத்தன் , புள்ளிக்காரன், பொல்லுக்காரன் ,
மாநீலி, குடாநீலி, தெவுத்தன் ,மாறா , மறுமுந்தநாச்சி, எனப்பல தெய்வங்களை அவா்களுக்கான
குறித்த சடங்குகளை இயற்றி பாடல்களைப்பாடி கொட்டு எனும் வாத்தியத்தை வாசித்து மிகுந்த
பயபக்தியுடன் வழிபடுகின்றனா்.

மேலும் ஏனைய மக்கள் பிராமணா்களாலும் சைவக் குருக்கள்மார்களாலும் மந்திரம் ஓத ஆகம
விதிக்கமைவான வழிபாடேற்கும் பிள்ளையார்,முருகன், சிவன், அம்பாள், கிருஷ்ணன் போன்ற
பெருந்தெய்வங்களை வணங்கும் மக்களாக காணப்படுவதுடன் தம் பூர்வீக கிராமியத்தெய்வங்களான
காளியம்மன்,கண்ணகையம்மன்,     மாாியம்மன்   ,     பேச்சியம்மன்,     கடல்நாச்சியம்மன்,
திரௌபதையம்மன்,வீரமாகாளி, நரசிங்கவைரவா், நாகதம்பிரான்,வீரபத்திரா்,நாகம்மை, வாசுகியம்மன்
போன்ற ஆகமம் சாராத     சடங்கு வழிபாடு என்னும் பத்ததி விதிமுறைக்கிணங்க நடைபெறும்
வழிபாட்டினை ஏற்கும் தெய்வங்களையும் மிகுந்த பயபக்தியுடன் சடங்காற்றி வழிபடுகின்றனா்.வருடம்
ஒருமுறை இம்மடாலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டு குறித்த மூன்று அல்லது ஐந்து நாட்கள்
இச்சடங்குகள்   தேவாதிகளின்    ஆடலுடனும்    பாடலுடனும்       மந்திர    உச்சாடனங்களுடனும்
நடைபெறும். அக்காலங்களில் அவ் ஊரே கோலாகலமாகக் காட்சியளிக்கும். எங்கும்
சடங்குப்பாடல்கள் கேட்டவண்ணம் இருக்கும் .அக்காலங்களில் அம்மக்களின் நடைமுறை
வாழ்க்கையின் அனைத்து விடையங்களும் சடங்கை நோக்கியதாகவே காணப்படும். இன்று
காலமாற்றங்களால்   சிலகோயில்கள்    ஆகமமுறைக்கேற்ப       தினப்பூசைகள்     நடைபெறும்
கோயில்களாக காணப்பட்டாலும் குறித்த காலங்களில் அவற்றிற்கான       சடங்குகளும்
நடைபெறக்காணலாம்.

                              இந்தகைய பண்பாட்டினைக் அடிப்படையாகக்                 கொண்ட
மட்டக்களப்பு பிரதேசத்தில்   ஆரையம்பதி என்னும் ஊர் ஏராளமான கோயில்களை தன்னகத்தே
கொண்டது.      இவ்வூாில் பிறந்து வளா்ந்த திரு.மூ.அருளம்பலம் அவா்கள் தன் இயல்பான
நற்குணாம்சங்களாலும்   இறைபக்தியினாலும்     இவ்விரு வழிபாடுகளிலும்      தன்னை
இணைத்துக்கொண்டவா்.    அவரது     பல் திறப்பட்ஆளுமைகள்   கிராமியக்   கலைகளிலும்
இலக்கியங்களிலும் பாிணமித்தன. சடங்கு வழிபாட்டினைப் பிரதான வழிபாடாகக் கொண்ட
இம்மக்களிடையே காணப்படும் பக்தி இலக்கியங்கள் பலவும் அக் கோயில்களின் வரலாறு கூறும்
நூல்களாகவும் அத்தெய்வங்களின் மேல் பாடப்பட்ட பாடல்களாகவும் காணப்படுகின்றன. இவை
பெருந்தெய்வக்கோயில்கள், அவற்றின் தெய்வங்கள் , சடங்குவழிபாட்டை ஏற்கும்            கிராமியத்
தெய்வங்கள் எனப் பலதிறப்பட்டன.       இங்குதான் திரு மூ.அருளம்பலம் அவா்களின் பக்தி
இலக்கியங்கள் விதந்துரைக்கப்படுகின்றன. இவரது பக்திசார்ந்்த படைப்புக்கள் ஏராளம். அவை
கட்டுரைகள், நாடகப்பிரதிகள் , கூத்துப்பிரதிகள், வில்லுப்பாட்டுக்கள், பக்திப்பாடல்கள் என பல
துறைப்பட்டன. அந்தவகையில்    இவரது படைப்புக்களில் பெரும்பகுதியாக காணப்படுபவை
இறையின்பம் பயக்கும் பக்திப் பாடல்களாகும்.

 அவா்களது பக்தி இலக்கிய வௌியீடுகளை நாம் மூன்று பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம்.
ஒன்று எழுத்துருப்பெற்று ஆற்றுகை செய்யப்பட்ட இலக்கிய வகை .மற்றயவை எழுத்துருப் பெற்ற
பக்திப் பாக்கள். ஏனையவை இசை இறுவட்டுக்கள்.அந்தவகையில் ஆற்றுகை செய்யப்பட்ட
இலக்கிய வடிவங்களில் அவா் 20 வில்லுப்பாட்டுக்களை இயற்றி பயிற்றுவித்திருக்கிறார்.அவற்றுள்
சித்திரபுத்திரா் (1987), இளையான்குடிமாறநாயனார்(2013), போன்றவை பக்திசார்ந்தன. அவா்
இயற்றிய 20 நாடகங்களுள்     “குந்தியின் வரம்”(1981)   , “திருநாவுக்கரசா்” (1986) , “ஊர்வசி
பெற்ற சாபம்”(1998) “குந்தியின் மடியில்” (1994),இறைநம்பிக்கை”(2004) ,போன்றன     இதிகாச
,புராண நாடகங்களாகும். அவர் எழுதி ஆற்றுகைசெய்த 18 வடமோடி ,தென்மோடிக் கூத்துக்களில்
பலவும் பக்தி சார்ந்தவை . இவை ஒருவகை .

மேலும் அவா் எழுதியுள்ளபக்தி சார்ந்த    நூல்கள் இன்னெருவகை.      அவா் பல பக்திப்
பாடல்களை    நூல்களாக வௌியிட்டிருக்கின்றார். அவற்றுள் “ ஈழத்து திருச்செந்தூர் முருகன்
ஆலயம் சிதானந்த தபோவனம் ஸ்தாபகா் ஓம்காரானந்த சரஸ்வதி சாிதம்” (2010) . “
பேச்சியம்மன் அவதாரம் ஆலயமும்” (2012) என்பவை சாித்திரம் கூறும் நூலல்களாகவும்
“கிராமத்து உள்ளங்கள்” (2013) என்னும் நுால் நாட்டார் இலக்கியமாகவும் காணப்படுகின்றது.
மேலும் சிவநேசனார் ஆலயம் (1992- காவடி, ஊஞ்சல்), “செல்வாநகா் சிவன்மேல் காவடிப்
பாட்டு” (1992) ஆரையம்பதி பேச்சியம்மாள்(1993 -காவடி, கும்மி, தாலாடடு், கரகம், காவியம்),
செல்வாநகர் காளிகோாயில் (1995- தாலாட்டு, கும்மி, ஆக்கப்பாடல்கள்), வம்மிக்கோணி
மாரியம்மாள் (1996- காவடி, கரகம், தாலாட்டு, ஆக்கப்பாடல்கள்), கோளாவில் மாரியம்மன்
கோயில் (1997- காவடி, கும்மி, ஆக்கப்பாடல்கள்),கல்லடி உப்போடை பேய்ச்சியம்மாள் பாடல்கள்
(2001), கல்லடி திருச்செந்தூர் முருகன் (கும்மி, காவடி, பக்திப்பாடல்கள், திருப் பள்ளியெழுச்சி)
ஆகிய புத்தகங்களையும் வௌியிட்டார். மேலும் கல்லடி உப்போடை பேச்சியம்பாள்(2001-
காவடி, கும்மி, தாலாட்டு, பக்திப்பாடல்),மட்/புதுக்குடியிருப்பு கற்பரசி கண்ணகி அம்பாள்
பாடல்கள் (2002) ,) மஞ்சந் தொடுவாய் வீரபத்திரர் காவியம் (2002), ஆலயடி வீரபத்திரர்
காவியம் (2003) திமிலதீவு கிறிஸ்ணர் (2004- காவடி, ஆக்கப்பாடலக்ள்), ,புன்னைச்
சோலைக்காளி(2006- காவடி, கும்மி, ஆக்கப்பாடல்கள்,பக்தி பாடல்கள்), புன்னைச்சோலை ஸ்ரீ
பத்திரகாளி அம்மன் பாடல்கள் (2006), ஆனைப்பந்தி பிள்ளையார் (2008- காவடிப் பாடல்கள்),
,கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்திவினாயகா் ஸ்ரீ பேச்சியம்மன் பாடல்கள்( 2010,
கல்லடி உப்போடை பேச்சியம்மாள் பாடல்கள் (2010) என ஏராளமான பக்திப் பாக்களை
எழுதியுள்ளார்.

   அவரது பெரும்  பக்தி இலக்கியமாகக் கொள்ளப்படுவது  “இறையின்பப் பாவாரம்”் ஆகும்.
714 பக்கங்களையுடைய மிகப்பெரும் கவிதை நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. மொத்தம்
3010 பாடல்களைக் கொண்ட இந்நூலே ஈழத்தின் பக்திப் பாடல் வாிசையில் மிகப்பொிய நூலாகும்.
பக்திப் பாடல்கள், பஜனைப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்ள், தெம்மாங்குப் பாடல்கள், தாலாட்டுப்

பாடல்கள், கும்மிப்பாடல்கள்,காவடிப்பாடல்கள்,காவியம் , திருபப்ள்ளியெழுச்சி பாடல்கள் என பல
வகைக் கிராமியப் பாடல்களை இந்நூல் கொண்டாமைந்துள்ளது.  இவை கிழக்குமாகாணத்திலே
கோவில் கொண்டு அருள் பாலித்துவரும் விநாயகர், சிவன், முருகன், விஷ்ணு, வைரவா், வீரபத்திரா்,
அனுமன், நரசிங்கா், நாகலிங்கேஸ்வரா் ஆகிய ஆண் தெய்வங்களின் மீதும் கண்ணகை, பேச்சி,
மாாி, காளி, கடலாச்சி, காமாட்சி ஆகிய பெண் தெய்வங்களின் மீதும் பாடப்பட்டுள்ளன. இப்
பாடல்களைத் தங்கள் ஆலய வரலாறு ,தெய்வ முகூர்த்தங்களின் அவதாரம், அற்புதம், பூசை
சடங்கு முறைகள், ஆலய அமைவிடங்கள் என்பவற்றை வைத்து அமைத்து தரும்படி அவ்வவ்
ஆலய பாிபாலன சபைகள், ஊரவா், பக்த அன்பா்கள் கேட்டுககொண்டதற்கு அமையவே பாடல்கள்
எழுத்துருப் பெற்றன. இப் பாடல்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதில் இருந்து இரண்டாயிரத்து
பதினாறு வரை இயற்றபட்ட பாடல்களின் தொகுப்பாகும். பெரும்பாலும் ஒவ்வொரு பாடல்களின்
கீழும் அப் பாடல்கள் ஆக்கப்பட்ட ஆண்டு, மாதம், திகதி குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலங்களில்
நடைபெற்ற சமகால சம்பவங்களும் பல பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது எதிர்கால
சந்ததியினா் காலக் கண்ணாடியில் உண்மைகளை கண்டறிவதற்காகும்.

வினாயகா் துதியுடன் ஆரம்பித்து தொடா்ந்து நாமகள் துதி பாடி தனது தாய்க்கு அந்நூலை
சமா்ப்பணம் செய்கிறார். தொடா்நது
                              ் வினாயகா் மீது 28 கும்மிப்பாடல்களைப் பாடி தன் கும்மிப்
பாடலை ஆரம்பிக்கிறார். இதனை       வினாயகரது பிரதாபங்களை கூறி வேண்டி        ஓர் காப்புக்
கும்மியாக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அவரது கும்மிப்பாடல்கள் மாமாங்கப் பிள்ளையார்
,களுதாவளைப்பிள்ளையார்,      கல்லடி உப்போடை   சித்திவினாயகா்  ,கொக்கட்டிச்சோலை
தான்றோன்றீஸ்வரா்,திருமலை திருக்கோணேஸ்வரா், சித்தாண்டி சித்திரவேலாயுதா், ஆரைநகா்
கந்தன். தாந்தாமலை முருகன், ஈழத்து திருச்செந்தூர் முருகன் ,தில்லை மண்டூர் முருகன்,
ஆரைநகா் விஷ்ணு , தாழங்குடா நிசப்த ஸ்ரீகிருஷ்ணன், ஐயப்பன், முனைக்காடு ஸ்ரீ
நாகலிங்கேஸ்வரா், ஆரைநகா் கண்ணகியம்பாள் (இரு கும்மிப்பாடல்கள்) செட்டிபாளையம்
கண்ணகியம்பாள், புதுக்குடியிருப்பு கண்ணகியம்பாள் , மகிழடித்தீவு கண்ணகியம்பாள் , ஆரைநகா்
பேச்சியம்பாள் கல்லடி உப்போடை பேச்சியம்பாள் , ஆரைநகா் வம்மிக்கேணி முத்துமாாி ,
கோளாவில் முத்துமாாி , நாவற்குடா ஸ்ரீமாாி , ஆரைநகா் செங்குந்தார் வீதி முத்துமாாி ,
காளியம்பாள் , செல்வநகா் பத்திரகாளி , ஆரைநகா் பத்திரகாளி , திருகோணமலை பத்திரகாளி
, மட்/ வேலூர் பத்திரகாளி , புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளி பொிய போரதீவு பத்திரகாளி ,ஏற்றம்
புல்லுமலை நாக கன்னி , மயிலம்பாவௌி ஸ்ரீ காமாட்சி , போன்ற கோயில்களிலும்
மடாலயங்களிலும்      எழுந்தருளி     அருள்பாலித்துக்   கொண்டிருக்கும்    தெய்வங்கள்   மீது
இயற்றிப்பாடியிருக்கின்றார்.  இக்  கும்மிப்பாடல்களை  மட்டக்களப்பில்  பயில்நிலையிலுள்ள
கும்மிப்பாடல்களின் பாரம்பாிய தருவான

                         தானினத் தானினத் தானானத்     - தன

                         தானினத் தானினத் தானானம்

                          தானினத் தானினத் தானானத்     - தன

                          தானினத் தானினத் தானானம்

என்னும் தருவுக்கமைவாக இயற்றியிருக்கின்றார். இத்தருவினை சில பாடல்களின் முன்னே
குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு கும்மிகளும் ஏறத்தாழ 20 பாடல்களிலிருந்து 66 பாடல்களைக்
கொண்டதாகக் காணப்படுவதோடு காப்புப் பாடலுடன் ஆரம்பிப்பது சிறப்பு.

இறைபக்தி விஞ்சிடும்      இறைப்பாக்கள் அடங்கிய அருள் அவா்களின் காவடிப்பாடல்கள் மிகச்
சிறப்பானவை .வினாயகா் (13 பாடல்கள்) , ஆனைப்பந்தி சித்திவினாயகா் ( 32 பாடல்கள்)
,ஆரையம்பதி அரசடிப்பிள்ளையார் (16 பாடல்கள்), நாவற்குடா கண்காணிப் பிள்ளையார் (27
பாடல்கள்) , கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி வினாயகா்( 25 பாடல்கள் ) சிவன் (24 பாடல்கள் ),
கந்தன் (29 பாடல்கள் ) ஈழத்து திருச்செந்தூர் (14 பாடல்கள் ) ,தில்லை மண்டூர் முருகன் (21
பாடல்கள் ,ஆரைநகா் ஐயப்பன் (21 பாடல்கள்) ,கண்ணன் (29 பாடல்கள் ) ,முனைக்காடு
நாகலிங்கேஸ்வரா் ( 23 பாடல்கள் ) , கண்ணகை அம்பாள் (37 பாடல்கள் ), புதுக்குடியிருப்பு
கண்ணகை அம்பாள் (29 பாடல்கள் ) , ஆரைநகா் பேச்சியம்மன் ( 24 படல்கள் ) ,கல்லடி
பேச்சியம்மன் (28 பாடல்கள் ) ,கோளாவில் முத்துமாாி ( 20 பாடல்கள் ) , வம்மிக்கேணி முத்துமாாி
(13 பாடல்கள் ) ,நாவற்குடா ஸ்ரீமாாி ( 27 பாடல்கள் ) ,பட பத்திரகாளி (26 பாடல்கள் ) ,வேலூர்
பத்திரகாளி ( 31 பாடல்கள் ) ,புன்னைச்சோலைக் காளி (22 பாடல்கள் ),போரதீவு பத்திரகாளி
(22 பாடல்கள் ) , ஸ்ரீகாமாட்சி அம்பாள் ( 30 பாடல்கள் ) என அவருடைய காவடிப் பாடல்கள்
காணப்படுகின்றன.      அத்தனை பாடல்களும் எட்டு அடிகளைக் கொண்ட நடைக்காவடி அமைப்பில்
மட்டக்களப்பில்    பயில்    நிலையிலுள்ள       களுகுமலைப்        பத்தின்  இசைக்கமைவாகவே
காணப்படுகின்றன. இப்பாடல்களில் வரும் சில சொற்களுக்கான ஒத்த சொற்களையும் இவற்றின்பின்
335 ஆம் பக்கத்தில் கொடுத்திருக்கின்றார் . ஒட்டாரம் - பிடிவாதம் , ஊதவனம் -கடல் , குறுகலா்
- பகைவா் , குச்சிதம் - இழிவு , கெழுவுடை – நட்பு , கெழுதகை – உாிமை , கேசரா் - கந்தரூபா்
, கையா் - வஞ்சகா் போன்ற 28 சொற்களுக்கான ஒத்த விளக்கச் சொல்லினைத் தந்தள்ளமை
பாடல்களை     மேலும்     புாிந்துகொள்ள     இலகுவாக        உள்ளது.      மேலும்   இவை
பெருந்தெய்வங்களின்மீதும் கிராமியத் தெய்வங்களின் மீதும் பாடப்பட்டுள்ளமை காவடி எடுத்தல்
என்பது இங்கு இரு வழிபாட்டிற்கும் பொதுவானதென்பதைக் குறிக்கின்றது.

கிழக்குப்பிரதேசத்தில் சடங்கு வழிபாட்டின் பிரதான இசைவடிவம் தாலாட்டு . அருள் அவா்கள் தன்
இறையின்பப் பாவாரத்தில் கண்ணகையம்மன் (53 ஈரடிப்பாடல் )                ,புதுக்குடியிருப்புக்
கண்ணகையம்மன் (34 நான்கடிப்பாடல் ) , பேச்சியம்மன் தாலாட்டு (33 ஈரடிப்பாடல் ) , ஆரைநகா்
பேச்சியம்மன் (32 ஈரடிப்பாடல் ) , கல்லடி உப்போடை பேச்சியம்மன் ( 31 நான்கடிப் பாடல் ) ,
ஆரைநகா் வம்மிக்கேணி மாாியம்மன் ( 44 ஈரடிப்பாடல்கள் ) , காளியம்மன் தாலாட்டு ( 33
ஈரடிப்பாடல் ) . புன்னைச்சோலை காளி (28 நான்கடிப் பாடல் ) புல்லுமலை அன்னையா்கள்
தாலாட்டு ( நாக கன்னித் தாயார் மீது 12 பாடல்கள் , காளிகாம்பாமீது 5 பாடல்கள் ,

மாாியம்மன்மீது 5 பாடல்கள் , பேச்சியம்மன்மீது 10 பாடல்கள் என அனைத்தும் நான்கடிப்பாடல்கள்
) இவ்வாறு கிராமியத் தெய்வங்களின்மீது தாலாட்டுப்பாடல்களை பாடியுள்ளார் .

கிழக்கிலங்கையின் கிராமியத் தெய்வ வழிபாட்டில் இன்றியமையாதது              காவியம். இவ்விசை
வடிவமே அனைத்துத் தெய்வங்கள் மீதும் பாடட்பட்ட இசைவடிவமாகும் .அதுமட்டுமன்றி ஓரே
தருவினையும் மெட்டினையும் உடையது. அருள் அவா்களும் இம்மரபிலிருந்து வழுவாது தன்
காவியப் பாடல்களைப் படைத்திருக்கின்றார் . பைரவா் காவியம் (12 பாடல்கள்),மஞ்சந்தொடுவாய்
வீரபத்திரா் (10 பாடல்கள்), நரசிங்கரூபன் (11 பாடல்கள்),ஆஞ்சநேயா் (11 பாடல்கள்) , முனைக்காடு
நாகலிங்கேஸ்வரா் (11 பாடல்கள்) , ஆரைநகா் கண்ணகை அம்பாள் (11 பாடல்கள்) , பேச்சியம்பாள்
(11 பாடல்கள்) , நாவலடி கடலாட்சி ( 13 பாடல்கள்) , ஆரைநகா் படபத்திரகாளி (17 பாடல்கள்)
, ஏற்றம் புல்லுமலை நாககன்னி (12 பாடல்கள்) , மாவிலங்கத்துறை ஸ்ரீ காமாட்சி அம்மாள் (12
பாடல்கள் ) என இவரது இறையின்பக் காவியங்கள் அமைந்திருக்கின்றன. இவை

                       தந்தனத னாதனத னாதனத னானா
                        தனதான னாதந்த னாதந்த னானா
                       தந்தனத னாதனத னாதனத னானா
                        தனதான னாதந்த னாதந்த னானா
என்னும் தருவில் மரபு மாறாது அமைந்திருக்கின்றன.



அருள் அவா்களது இந்நூலில் பேச்சியம்மன் மீதும் முத்துமாாியம்மன் மீதும் இரு கரகப்பாடல்கள்
உள்ளன.      இரண்டும் வெவ்வேறு மெட்டுக்களில் அமைந்துள்ளன. அருள் அவா்கள் தம்
இறையின்பப்பாவாரம் நூலில் ஆரையம்பதி எள்ளுச்சேனை ஸ்ரீ சித்திவினாயகா் மீதும் செல்வாநகா்
சிவனேஸ்வரா் மீதும் ஊஞ்சல்ப் பாடல்களை பாடியுள்ளார். இவரது ஊஞ்சல் பாடல்கள் காப்புடன்
ஆரம்பித்து 11 ஊஞ்சல் பாடல்களின் பின் வாழி பாடி தொடா்ந்து எச்சாிக்கை , பாராக்கு , லாலி
எனும் இசைவடிவங்கள் முறையே அமைந்து மங்களத்தில் முடிவுறுகிறது . இவற்றில்

                      “ மூலவனாய் வீற்றிருக்கும்வினாயகா் வாழி
                      முதற்பொருளாய் காத்திருக்கும் அகுந்தனும் வாழி” என வருகிறது
தொடா்ந்து
                 “அரனாாின் புதல்வா ஐங்கரனெ எச்சாிக்கை
                 கருடவாகனன் மருகா கணபதியே எச்சாிக்கை
                 ஆதிசிவ காமியம்மை பாலா எச்சிக்கை
                 ஆரைநகரமா்ந்த ஆனை முகவா எச்சாிக்கை”            என எச்சாிக்கைப் பாடலும்


                 “ ஆதிசிவன் மைந்தா ஆனைமுகவா பராக்கு

                  ஆரைநகா் தன்னிலுறை ஐங்கரனே பராக்கு
                  ………………………………………..
                  வாமி சிவகாமி யருள்மைந்தா பராக்கு
                  பாவ விமேசனமுடை பகவா பராக்கு                       என பராக்குப்பாடலும்
தொடா்ந்து
                 ஆரைநகா் லாலி ஆறுமுகவா லாலி
                 பூதகணம் சூழுகின்ற சித்தி புத்திபாலா லாலி லாலி ……
  என லாலிப்பாடலும் பாடி மங்களத்துடன் முடிவுறுகிறது.
மேலும் பக்தி இலக்கியப் பாடல் வகையில் திருப்பள்ளியெழுச்சி ஓர் வகை . தெய்வத்தை
புலரும்பொழுதில் சயனத்திவிருந்து எழும்புமாறு வேண்டிப் பாடும் பாடல்களாகும். இதனை
முதன்முதலில்      மணிக்கவாசகாின்     திருவாசகத்தில்      காணலாம்      அவை      “   போற்றியென்
வாழ்முதலாகிய பொருளே” என்று தொடங்கி் நான்கு சீாகள்,
                                            எட்டடிகள்    கொண்ட பத்துப்
பாடல்களைக்    கொண்டுள்ளது.   அப்பாடல்கள்    ஒவ்வொன்றும்    “எம்பெருமான்    பள்ளி
எழுந்தருளாயே”     முடிவுறுகிறது     அந்தவகையில்   அருள்    அவா்கள்    மூன்று
திருப்பள்ளியெழுச்சிகளை இயற்றியிருக்கிறார். ஆரையம்பதி எள்ளுச்சேனை ஸ்ரீசித்தி வினாயகா் ,
ஈழத்து திருச்செந்தூர் முருகன் ,நிசப்த ஸ்ரீகிருஷ்ணன் ஆகிய தெய்வங்களின்மேல் பாடப்பட்ட
இவரது     பள்ளியெழுச்சிகள் பெரும்பாலும்  த்தெய்வத்தின் வரலாற்றையும்  சூழலையும்
பிரதாபங்களையும் கூறி இறைவனைத் துயில் எழுப்புவதாக காணப்படுகிறது .


                   “ஓமெனும்   மந்திர   மோதின    ரொருபால்
                            பாவாரம் பாடிப் பணிந்தன ரொருபால்
                      பூமல ராரம்     புனைந்தன     ரொருபால்
                       புகழ் பாடிப் பண்ணிசைத்தன ரொருபால்
                    தேவா்கள் வாழ்த்தொலி தொனித்தன வொருபால்
                         ஆராதித் தக முருகின ரொருபால்
                     ஆலயத் தமா்ந்தரு     ளாரைநகா்ப் பதியோய்
                           ஆனை முகனே பள்ளி யெழுந்தருளாயே”
இவ்வாறு “ இன்னிசை வீணையா் யாழினா் ஒருபால்” என்னும் திருவாசகத்தினை ஒத்த அந்தியப்
பிராசங்களுடன் அயைந்துள்ளமை சிறப்பு.
மேலும் ஏராளமான பக்திப் பாசுரங்கள் , பஜனைப் பாடல்கள் , ஆக்கப்பாடல்கள் போன்றவற்றை
இறையின்பப் பாவாரத்திற் காணவாம் . சில தருக்களுடன் காணப்படுகின்றன . சில பாடல்கள்
தொகையறாவுடன் ஆரம்பித்து பல்லவி ,அனுபல்லவி, சரணம் என கீர்த்தனை அமைப்பில்
காணப்படுகின்றன . அவற்றில் சிலவற்றிற்கு சுருட்டி , மோகனம் , ரஞ்சனி என ராகங்களையும்

குறிப்பிட்டிருக்கின்றார். அந்தவகையில் இவா் நாட்டார் இசை வடிவங்களில் மட்டுமல்ல கா்நாடக
இசையிலும் பாிச்சய முடையவராக தொிகின்றார்.
இவரது பாடல்கள் அடங்கிய மேலும் ஒரு நூலை 2022 இல் வௌியிட்டிருக்கின்றார் . “பத்தாலயப்
பாவாரங்கள் என்னும் இந் நூல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேச செயலாளா்
பிாிவுகளில் கோயில் கொண்டெழுந்தருளிய தெய்வத்தின்சிறப்புக்கள் ,அக்கோயில் வரலாறு ,
சடங்கு ,வழிபாட்டுமுறைகள் போன்றவற்றை உள்நின்றுருகிப் பாடியிருக்கின்றார். பண்டாாியாவௌி
நாகதம்பிரான் ஆலயம், ஆரையம்பதி கடற்கரை நரசிங்கா் ஆலயம், இருதயபுரம் மேற்கு
வாசுகியம்மாள் ஆலயம் , பருத்திச்சேனை மீனாட்சி அம்பாள் ஆலயம், முனைக்காடு முத்துமாாி
அம்பாள் ,முனைக்காடு வீரபத்திர் ஆலயம் ,மஞ்சந்தொடுவாய் வினாயகா் கண்ணகை ஆஞ்சநேயா்
ஆலயம், குமாரத்தன் ஆலயம், கொல்லைநுலை பேச்சியம்மன் ஆலயம், விளாவட்டுவான் வீரமாகாளி
ஆலயம் ஆகிய பத்து ஆலயங்கள் மீது அவா் இயற்றிய பாடல்களே பத்தாலயப் பாவாரங்கள்
என்னும் பக்தி இலக்கியமாகும் . இந்நூலிலும் கும்மி, காவியம் , காவடி ,தாலாட்டு , பஜனை ,
போற்றி , அர்ச்சனை போன்ற இசைவடிவங்களே காணப்படுகின்றன .
அருள் அவா்களது பக்திபாக்கள் பக்திப்பெருக்கு நிறைந்தவையாக மக்களுக்கு பக்தி உணா்வை
ஊட்டுவதுடன் அவை சமகாலப் பிரச்சனைகளையும் பேசுகிறது. .


                வௌ்ளையா் ஆட்சியை ஒருங்கிணைத்தார் -கள்ள
                உள்ளத்தார் உாிமை தர மறுத்தார்
                எல்லைகளை பறித்து இடாிழைத்து
                தொல்லைகள் செய்கின்றார் வல்லவளே ( இ.இ.பா பக் 135)
என சமகால இனமுரண்பாடுகளைப் பேசுகிறது .


                     நிலவின் ஒழியிலே பேதமுன்டோ? – பூக்கும்
                     மலரதன் மனணத்திலே சாதியுன்டோ? காற்று
                     மழையில் மத மமதையுண்டோ? -ஏற்க
                     எண்ணாத நெஞ்சங்கள் நஞ்சு தாயே                  ( இ.இ.பா. பக்- 134)
என்னும் பாடலிலும் மேலும்
              இரண்டல்ல ஒன்றே நாமென்று எடுத்துரைக்க
                 இப்புவியில் எத்தனையொ உவமானம் வைத்தாய்
              உப்பு நீாில் கரைந்தால் உப்புவேறோ? நீரும் வேறோ ?
                  தப்பிதம் கற்பிப்போரே சாதி சமயம் பிறப்பிலுண்டோ? (இ.இ.பா பக்- 284)


              ஏந்து   செல்வ நாடு சென்று      நிதியீட்டினாலும்
                 வேந்தா்முதல் மாந்தா்வரை   பிறப்பிலொன்றேயென்று…..
                                                                 ( இ.இ.பா.-பக்- 285)

என சமநீதி பேசி சாதிக் கொடுமைக்கு எதிராக கேள்வி தொடுக்கிறார். அதனை இறைவியிடம்
முறையிடுகிறார்.
இவரது பாடல்கள் நமது சமுகம்சார்ந்த வழிபாட்டு முறைகள் , சடங்கு முறைகள் , தெய்வங்களின்
பால் நிகழ்ந்த அதிசயங்கள் வரலாறுகள், சமுக நம்பிக்கைகள் , பண்பாடுகள் ,கலைகள் ,
வழக்காறுகள், என்னவற்றை பதிவு செய்கின்றன . அவை வரும் காலத்திற்கான இந்த சமுகத்தின்
செய்தியாகும்.
மட்டுநகாின் கிராமங்களது   இயற்கை எழிலை ஆங்காங்கு கூறி மகிழ்கிறார் “ “ கார்பொழி மஞ்சு
கொஞ்சு மஞ்சந்தெடுவாய்” , “வங்கக் கடல் ஒலிக்கும் கிழக்கே”   “மட்டு வாவி மீனினமிசைக்கும்
மேற்கே”   “ தேனூறும் தேற்றாத்தீவு” , இவ்வாறு பல இடங்களில் காணலாம். இலங்கையில்
நடந்த இனக்கலவரங்கள் , அழிவுகள்        ,சூறாவளி , ஆழிப்பேரலையால் வந்த அழிவுகள்
போன்றவற்றையும்     இப் பாடல்களில் ஆங்காங்கு பதிவு செய்திருப்பதைக் காணலாம். இவரது
கண்ணகையம்மன் பாடல்கள் ஈழமக்களின் பார்வையில் கண்ணகியம்மனின் முக்கியத்துவம்
பற்றியும் வரலாறுபற்றியும் கூறுகிறது . கிழக்குப் பிரதேசத்தின் சடங்கு வழிபாட்டில் முக்கியம்
பெறும் பாடல்களின் தொகுப்பு அடங்கிய சீமான் கணபதிப்பிள்ளை அவா்கள் ஏடுகளிலிருந்து
தேடித்தொகுத்தளித்த “மகாமாாித்தேவி திவ்யகரணி” என்னும் தொகுப்பு நூல்களிலுள்ள காவியம்
போன்ற பாடல்களை தனது காவிய அமைப்பிலும் மரபுமாறாது பேணியிருப்பதுடன் பல பாடல்களில்
தனித்தும் வேறுபட்டும் தன்னைப் பதிவு செய்திருக்கிறார் .


இவ்வாறு அருள் அவா்களது நூல் வடிவில் காணப்படும் பக்தி இலக்கியங்களின் சிறப்புக்கள்
காலத்தால் அழியா நம் கிழக்குப் பிரதேசத்து மக்களது  பண்பாட்டின் பொக்கிஷங்கள் எனலாம்.
                         ஆரையூர் .மூ.அருளம்பலம் அவா்களின் இன்னுமொரு பரிணாமத்தின்
தோற்றம் ஒலிப்பேழைகள். அவரது இறையிசைப் பாக்கள் அடங்கிய ஓலிப்பதிவுகளாகும். அவற்றுள்
ஆரம்பகாலத்தில் ஒலிநாடாக்களாகவும் ஏனையவை இறுவட்டுக்களாகவும் வௌிவந்துள்ளன.
 அவை இறையின்பப் பாவாரம் , பத்தாலய பாவாரங்கள் ஆகிய அவரது நூலிலிருந்து தொிவு
செய்யப்பட்ட பாடல்களாகும் . இவரது கலை முயற்சியானது தனியே பாடல்கள் எழுதுவதோடு
நில்லாது ஒலிப்பேழை (இறுவட்டு) வௌியிடுதல் வரை சென்றிருக்கின்றது.அவரது பாடல்கள்
அடங்கிய மொத்தம் 30       ஒலிப்பேளைகள் இதுவரை வௌிவந்துள்ளன.           மட்டக்களப்பு
மாவட்டத்திலே அதிக ஒலிப்பேழைகளுக்கு வரியெழுதி வௌியிட்ட பெருமையை ஆரையூர் அருள்
பெற்றுக் கொண்டதனால் கலைப்பணியுடன் இம் மண்ணையும் இவர் பெருமைப்படுத்துகிறார்.


வௌியிட்டுள்ள ஓலிபபேழைகள் (குறுந்தகடுகள்)

            1.    1992ம் ஆண்டு மட்/ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயம் (காவடி, ஊஞ்சல்)

            2.    1993ம் ஆண்டு மட்/ஆரையம்பதி கண்ணகி அம்மாள ் ஆலயம் (கும்மி,
                  தாலாட்டு, பக்திப்பாடல்கள்)

3.      1994ம் ஆண்டு மட்/ஆரையம்பதி பேச்சியம்மாள் ஆலயம் (காவடி, கும்மி,
        தாலாட்டு, கரகம், காவியம்)

4.      1995ம் ஆண்டு மட்/ஆரையம்பதி செல்வநாகர் காளி கோயில் (தாலாட்டு,
        கும்மி, ஆக்கப்பாடல்கள்)

5.      1996ம் ஆண்டு மட்/ஆரையம்பதி வம்மிக்கேணி மாரி அம்பாள் ஆலயம் (கரகம்,
        காவடி, தாலாட்டு, ஆக்கப்பாடல)்

6.     1997ம்   ஆண்டு    மட்/கோளாவில்     மாரியம்மாள்   ஆலயம்    (கரகம்,   காவடி,
       தாலாட்டு, ஆக்கப்பாடல்)

7.       2001ம் ஆண்டு மட்/ஆரையம்பதி வடபத்திர காளி கோயில் (புதிய

        ஆக்கப்பாடல், காவியம்)

8.     2001ம் ஆண்டு மட்/கல்லடி உப்போடை பேச்சியம்மாள் ஆலயம் (கும்மி,
       காவடி, தாலாட்டு, ஆக்கப்பாடல)்

 9. 2002ம் ஆண்டு மட் /புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மாள் ஆலயம் (கும்மி,
       தாலாட்டு, பக்திப்பாடல்கள்)
10.      2002ம் ஆண்டு மட் /மஞ்சந்தொடுவாய் வீரபத்திரர் காவியம்

11.      2003ம் ஆண்டு மட் /ஆரையம்பதி ஆலயடி ஆதி வைரவா்

12.      2004ம்    ஆண்டு  மட்   /திமிலதீவு   கிருஸ்ணா்      ஆலயம்      (காவடி,
         ஆக்கப்பாடல்கள்)

13.      2005ம் ஆண்டு மட் /ஆரையம்பதி கண்ணகி அம்பாள் ஆலயம் (கூறைதாலிப்
         பாடல்கள்)

14.      2006ம் ஆண்டு மட் /புன்னைச் சோலைக் காளி கோயில் (காவடி, தாலாட்டு,

          ஆக்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள்)

15.      2008ம் ஆண்டுமட் /ஆனைப்பந்தி ஸ்ரீ சித்திவிநாயகர்  ஆலயம்

       (காவடிப்பாடலகள்)

16. 2010ம் ஆண்டு மட்  /கல்லடி உப்போடை பேச்சியம்மாள் ஆலயம்

      (பக்திப்பாடல்கள் - 13)

            17.      2011ம் ஆண்டு மட் /நாவற்குடா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் (காவடி, கும்மி,
                  பக்திப்பாடல்கள்)

            18. 2012ம் ஆண்டு மட் /ஆரையம்பதி ஸ்ரீ கந்தசாமி ஆலயம் ( காவடி, கும்மி,
                  பக்திப்பாடல்கள்)
            19. 2013ம் ஆண்டு மட் /ஆரையம்பதி கண்ணகி அம்பாள ் “சிலம்புச் செல்வி”
                  (காவடி, கும்மி, பக்திப்பாடல்கள்)

            20. 2013ம் ஆண்டு (மட்  /ஆரையம்பதி வடபத்திரகாளி ஆலயம்

                    “வடபத்திரகாளிகாம்பா”

            21. 2014ம் ஆண்டு மட் /புல்லுமலை ஸ்ரீ நாககன்னி ஆலயம் “நாககன்னி”

            22. 2014ம் ஆண்டு மட் /ஆரையம்பதி ஸ்ரீ பரமநயினார் ஆலயம் “ஸ்ரீ பரமநயினார்”
                  (ஐயனார்)

           23. 2015ம் மட் /முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரா் ஆலயம் “ஸ்ரீ
                  நாகலிங்கேஸ்வரா் பாமாலை”

            24. 2016ம் ஆண்டு மட் /மகிழடித்தீவு ஸ்ரீ கண்ணகையம்மாள்

            25. 2018ம் ஆண்டு மட் /ஆரையம்பதி கண்ணகி அம்பாள் ஆலயம் “ஆரையூர்
                  கண்ணகை” (காவியம், பகத்ிப்பாடலக்ள்).
            26. கொல்லைநுலை பேச்சியம்மன் பாடல்கள்
            27. ஆரைநகா் கந்தன் பாடல்கள்
            28. மஞ்சந்தொடுவாய் கண்ணகையம்மன் பாடல்கள்
            29. ஆரைநகா் நரசிம்மன் பாடல்கள்
            30. நாவற்குடா கண்காணிப் பிள்ளையார் பாடல்கள்



ஆரையூர்   மூ.அருளம்பலம்        அவா்களுடைய       ஓலிப்பேழைகளில்   பல   உள்@ர்   கலைஞா்கள்
இசையமைத்துள்ளதுடன் செனனையைச் சோ்ந்த சதீஷ் அவா்களும் சையமைத்திருக்கின்றார் .
மேலும் நம்நாட்டு பாடகா்கள் பலா் பாடியிருப்பதோடு இந்தியக் கலைஞா்களும் பாடியிருப்பது
குறிப்பிடத்தக்கது.்சதீஸ், ஜனனி, ஜூட் நிரோஷன் , பிரதீபன், சிவா , மோகன் , அமுதசாகரன்,
ஏ.செல்வக்குமார் போன்ற பலா் கும்மி ,காவியம் போன்ற பாரம்பாிய இசைமெட்டுக்களுக்கு இசை
அமைப்புச் செய்ததுடன்       ஏனைய பாடல்களுக்கு இசையத்துள்ளனா் . மேலும் திரு. பத்மஸ்ரீ
,அகலியா , கு. சபேஷ்காந் , சாந்தினி. தருமநாதன் ,மு.நமசிவாயம் , பு. காயத்திாி, பு.டிலக்ஷி,

ராஜ்,சா்ஸே்வரன், லிங்கேஸ்வரராஜா ,ஸ்ரீரம்யா , இரா.தெய்வராஜன் , கேமா , சுவா , காயத்திாி ,
சாயி சங்கா் ,நீரஜா , விகாஷ் , டிலாணி , சபேசன் , ாிஷிகேசவன் , போன்ற இலங்கைக்
கலைஞா்களும் திரு. மாணிக்கவினாயகம் , கிருஷ்ணராஜ், மார்ட்டின், ஆனந்து, முகேஷ் ,
தெய்வராஜன் , உசாராஜ் , ரேணுகா , தீபா , சோபியா போன்ற தென்னிந்தியக் கலைஞா்களும்
பாடிய பெருமை ஆரையூர் அருள் அவா்களைச் சாரும்.

 ஆரையூர்     அருள்    அவர்கள்    இயற்றிய சடங்கு     பாடல்கள்   பலவற்றிற்கு    அவரே
இசையமைத்துள்ளார். அவரது கண்ணகை அம்மனின் கூறைதாலிப் பாடல் , ஊஞ்சல் பாடல் என்பன
புதிய இசை மெட்டில் காணப்படுகின்றன. தற்கால இலதத்ிரனியல் சாதனங்களின் வளா்ச்சி அவரது
சடங்கு     பாடல்களில்   சில   மாற்றங்களை  ஏற்படுத்தியுள்ளது.    இப்பாடல்களில்   நவீன
வாத்தியங்களுடன் பாடப்பட்டு ஒலி,ஔிப்பதிவுகள்      செய்யப்படுகின்றன. இதனையும் ஒரு
வளர்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது . அந்தவகையில் அவா் இற்றைக்காகி காலத்தோடு
ஒட்டிப் பயணிப்பதையும் அவதானிக்க முடிகிறது. மேலும் அவர் இன்றுவரை தன் செயற்பாடுகளில்
ஓய்வொழிச்சலின்றி பயணித்துக்கொண்டே இருக்கும் செயல்வீரா் . முத்தழிழ் வித்தகன் வாழ்ந்த
மண்ணில் இயல் இசை நாடகம் மூன்றிலும் குறையாப் பணியாற்றிவரும் மூ.அருளம்பலம்
அவா்களுக்கு கிழக்குமண் பெரும் கடமைப் பட்டிருக்கின்றது.



வாசிக்கப்பட்டவை

   1. ஆரையூர் அருளம்பலம் , இறையின்பப் பாவாரம் , 2016 ,யு.சு.வு.ீசiவெநசள ,திருகோணமலை
   2. ஆரையூர் அருளம்பலம் , பத்தாலயப் பாவாரங்கள் ,2022 ,ஸ்ரீமுருகன் இந்துமாமன்றம்
      வௌியீடு ,மட்டக்களப்பு
   3. செல்வாநகா் சிவன்மேல் காவடிப்பாட்டு , பிரதி ,1992
   4. க.நிலாணி ,கவாபூஷணம் மட்டக்களப்பு ஆரையம்பதி மூ. அருளம்பலம் அவா்களின்
      கோயில் சடங்குப்பாடல்களில் இசை பற்றிய ஆய்வு , ஆய்வுக்கட்டுரை , 2017 ,
      இசைத்துறை , கலைப்பீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் .

நோ்காணல்

    அருளம்பலம் .மூ , ஆரையம்பதி , வயது 75 , ஓய்வுபெற்ற அதிபா் , தேசியக் கலைஞா்

தகவல்கள்

    ஒலிநாடாக்கள் ,இறுவட்டுக்கள் ,you Tube , இணையத்தளம் ,