“பாதுகாப்பான உணவு – ஆரோக்கியமான சமூகம்” மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக திடீர் சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 19.08.2026 அன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், வெதுப்பகங்கள், அங்காடிகள், தேநீர் சாலைகள் உள்ளிட்ட உணவு கையாளும் நிலையங்களில் திடீர் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி DR.R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும், சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. M . அச்சுதன் அவர்களின் மேற்பார்வையில் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நடவடிக்கையில் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி Dr.R. ரமேஷ், பிராந்தியத்திற்குப் பொறுப்பான மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் T. கிருஷாந்தன் பிராந்திய உணவு மற்றும் ஒளடதப் பரிசோதகர் விமலசேகரம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் இதில் ஈடுபட்டனர். பரிசோதனைகளின்போது உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான முறையிலும் கையாளப்படுகின்றனவா, உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் இடங்களின் தூய்மை, உணவுப் பொருட்களின் சேமிப்பு முறைகள், ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் மற்றும் உணவு கையாளும் ஊழியர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார விடயங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமை, உணவு கையாளும் ஊழியர்களிடம் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் கையாளப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, குறைபாடுகள் காணப்பட்ட 7 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிலையங்கள் தொடர்பில் எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சுற்றுச்சூழல் தூய்மையாக உள்ளதா?
- உணவு சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா?
- உணவுப் பொருட்கள் மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா?
- உணவு தயாரிக்கும் இடங்கள் சுத்தமாக உள்ளனவா?
- ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறதா?
- உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)



















