சிறைச்சாலைகளில் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு

 


கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளை நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார நேற்று (20) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமைகளை ஆய்வு செய்தபோது, மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடினார்.
அத்துடன், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.
பெண் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் தேவைகள் மற்றும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர்கள் மற்றும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.