மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சி




மதம், மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான “The Peace Institute IV – Training of Trainers” பயிற்சி நிகழ்வு கண்டியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய YMCAகளின் மதங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மன்றம் மற்றும் இலங்கை தேசிய YMCA பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இப்பயிற்சி நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கண்டியில் அமைந்துள்ள Royal Classic Nature Resort இல் நடைபெற்றது.

மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துதல், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மட்டக்களப்பு YMCAயின் இளைஞர் கழகச் செயலாளர் திரு. எம். ஜெனீட் அவர்களும் இப்பயிற்சி நிகழ்வில் பங்கேற்று, பயிற்சியின் அனைத்து அமர்வுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன், தனது கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் பெறுமதிமிக்க பங்களிப்புகளை வழங்கி பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இப்பயிற்சியின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்களை இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்துவதற்கும், பரந்துபட்ட சமூகத்தின் நலனுக்கும் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மட்டக்களப்பு YMCA இளைஞர் கழகச் செயலாளர் திரு. எம். ஜெனீட் அவர்களுக்கு மட்டக்களப்பு YMCA சார்பிலும், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!