மட்டக்களப்பு கல்லடி கமநல சேவை நிலையத்தில் விற்பனை நிலைய திறப்பு விழா.



 










வரதன்

   மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு நகரை அண்டிய விவசாயிகளின் நலன் கருதி புதிய விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று22.08.2026 சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் எம் பாயிஸ் தலைமையில் இடம் பெற்றது இதற்கு பிரதம அதிதியாக மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையத்தின் புதிதாக நியமனம் பெற்ற பிரதி பணிப்பாளர் எஸ் யோகராஜ் கலந்து கொண்டு புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனை பணிகளை உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் இதன் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் விதை உற்பத்தியில் கலை நாசினிகள் அத்தியாவசிய பொருட்களை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் இன்றைய திறப்பு விழா நிகழ்விற்கு மாவட்ட கமநல நிலையத்தின் உயர் அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் கல்லடி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்