தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, நல்லத்தண்ணி – சிவனொளிபாத மலை பாதையில் ‘அஹல கணுவ’ பகுதிக்கு அருகிலுள்ள மண்மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால், அந்தப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாதையில் சரிந்து விழுந்துள்ள மண்ணை அகற்றி, போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





