விபத்தில் காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள்! பணிப்பாளர் சுகுணன் நெகிழ்ச்சி.

 


காரைதீவு சகா)

விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள்
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம். சுகுணன் நெகிழ்வுடன் தெரிவித்தார்.

விபத்தின் பின்னர் 21 நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம்(24) திங்கட்கிழமை பணிக்கு திரும்பிய அவர், வைத்தியசாலை சமூகத்தை ஒன்றுகூடல் மண்டபத்தில் சந்தித்து முதன் முதலில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

நானில்லாத வேளையில் கடந்த 3வார காலம் சிறப்பாக பதில் கடமை புரிந்த பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீ சங்கர் இற்கு நன்றிகள்.

மேலும் சகல துறை பொறுப்பாளர்கள் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் ஊழியர்கள் நானில்லாதபோதும் எவ்வித தளம்பல் இல்லாமல் சீராக இயங்கியதற்கும்
மனமார்ந்த நன்றிகள்.

 

மேலும் என் மீது அன்பு வைத்து உறவினர்கள் பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் பொது அமைப்புக்கள் அனைவரும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றிகள்.

உற்பத்தி திறன் பார்வையாளர்கள்
இவ்வாறு ஒரு வைத்தியசாலையை எவ்வாறு உருவாக்கினீர்கள் என்று வியக்கும் விதமாக மாற்றியமைக்க உதவிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள்.

வைத்தியசாலை நிர்வாகப் பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படும் பாரத்தையும் மனச்சுமையையும் எதிர்கொள்ள இறைநம்பிக்கை துணையாக இருக்கிறது.

கிறிஸ்தவம், பௌத்தம், இஸ்லாம், இந்து உள்ளிட்ட எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் இறைவன் துணையாக இருப்பதை உணர முடிகிறது.

அதேவேளை, நிர்வாகப் பொறுப்புகளை முன்னெடுப்பதில் ஏற்படும் சவால்களை தனிப்பட்ட முறையில் பார்க்காமல், வைத்தியசாலையின் நலன் மற்றும் நோயாளிகளின் நலனை முன்னிலைப்படுத்தி அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.