ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலம்: ஒரு லட்சத்திற்கு மேல் லஞ்சம் பெற்றால் இனி பிணை கிடையாது...

 


இலங்கையில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 100,000 ரூபாவிற்கு மேல் லஞ்சம் கோருதல், ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய குற்றங்களில் சந்தேகிக்கப்படுபவர்களுக்கு மேல் நீதிமன்றத்தின் மூலமாகவே, அதுவும் விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே பிணை பெற முடியும் என்ற புதிய நடைமுறை இதன்கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.