கடந்த 05/08/2026 ஆந் திகதி திருகோணமலை மாவட்டத்தில்,மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, நல்லூர் முதற்குடிக் கிராமத்தில், உலகப் பழங்குடி தினத்தை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர், உதவி அரசாங்க அதிபர், மூதூர் வெருகல் பிரதேச செயலாளர்கள், மூதூர் கலாச்சார உத்தியோகத்தர்கள், மூதூர் வெருகல் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் கிராமமட்டச் சங்கங்களின் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
இதில் கௌரவ ஆளுநர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் சிறப்பு உரைகளை ஆற்றினர்.
அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களும் விரிவுரையாளர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அடுத்தது மகியங்கனை தம்பானையில் அகில இலங்கை ரீதியாக 09.08.2026 ஆந் தேதி உலகப் பழங்குடி தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் பிரதம மந்திரியும் அமைச்சர்களும் அரசாங்கத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
இதில் சிறப்பம்சமாக, வட - கிழக்கில் உள்ள பழங்குடிச் சமூகங்களின் அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
மகியங்கனையின் பழங்குடித் தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட இத்தேசிய நிகழ்ச்சியில் திருகோணமலை மூதூர் பிரதேசப் பழங்குடிச் சமூகத்தினரும் கலந்து கொண்டதுடன் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இதன்காரணமாக மூதூர் பிரதேசப் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த 42 பேருக்குத் தேன் எடுக்கச் செல்வதற்கான தற்காலிக அடையாள அட்டை கிடைக்கப்பெற்றுள்ளது.அதேநேரத்தில் 12 தேன் எடுக்கும் நபர்களுக்கான சரம், துவாய், கோடாரி என்பவையும் வழங்கப்பட்டன.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)





