காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.
நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.





