மொனராகலையில் கொடூர விபத்து : 5 பேர் உயிரிழப்பு : 3 பேர் காயம் !

 


மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாத்திரிகள் குழுவை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் (டிராக்டர்) டிப்பர் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.