மட்டக்களப்பு, 25.08.2026: மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக . சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் சுகாதார மேம்பாட்டு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் M. அச்சுதன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத் தரங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான திடீர் வர்த்தக நிலைய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 25.08.2026 அன்று செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவிற்குட்பட்ட செங்கலடி, ஏறாவூர் தமிழ் மற்றும் வந்தாறுமூலை/கொம்மாதுறை ஆகிய PHI பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது உணவகங்கள், பேக்கரிகள், கேன்டீன்கள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட உணவு விற்பனை நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனைகளின்போது சுகாதாரமற்ற நிலை, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) தொடர்பான குறைபாடுகள், உணவு கையாளுபவர்களின் மருத்துவப் பரிசோதனை தொடர்பான குறைபாடுகள், பொருட்களின் பெயரிடல் குறைபாடுகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
மூன்று PHI பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் மொத்தம் 29 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, 21 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கண்டறியப்பட்ட குறைபாடுகளில்:
- சுகாதாரமற்ற நிலை – 11
- PPE தொடர்பான குறைபாடுகள் – 08
- மருத்துவப் பரிசோதனை தொடர்பான குறைபாடுகள் – 05
- பெயரிடல் குறைபாடுகள் – 04
- காலாவதியான பொருட்கள் – 01
என குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் தரமானதுமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்கள் உரிய சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் இத்தகைய திடீர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி Dr. உதயசூரிய ,பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், உணவு ஔடத பரிசோதகர் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)





.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)





