யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200 இற்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (21-08-2026) மல்லாகம் நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, அவரை எதிர்வரும் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.





