வரலாற்று
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப்
பெருவிழா 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய வளாகம் மட்டுமல்லாது
யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆலய
வளாகத்தில் ஆயத்தப்பணிகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஈழத்துத் தமிழ் மக்களின் மிக முக்கிய
ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து 25 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும்.
நல்லூர்
கந்தன் பெரும் திருவிழாவை முன்னிட்டு புலம்பெயர் தேசங்களில் இருந்தும்
பெருமளவான மக்கள் நாட்டுக்கு வருகை தருவார்கள். அதுமட்டுமல்லாது இந்திய
பக்தர்களும் அண்மைய காலமாக நல்லூர் கந்தனை காண வருகை தருவது
அதிகரித்துள்ளது.





