CHIEF EDITOR
கொழும்பு மார்கெயா சுவிசேஷ பணிக்குழுவினரின் அனுசரணையுடன், கொழும்பு லயன்ஸ் கழகம் D7 மற்றும் மட்டக்களப்பு Lions Club of Batticaloa Lady Stars for Humanity யும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் 2026 ஜூலை 30 ஆம் திகதி மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் சேவையாற்றுவதற்காக கொரியாவிலிருந்து சுமார் 40 மருத்துவர்கள் வருகை தந்திருந்தனர். பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி பல் மருத்துவம், கண் மருத்துவம், இரத்தப் பரிசோதனை, நீரிழிவு (Diabetic), உயர் இரத்த அழுத்தம் (Blood Pressure) உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆய்வக (Laboratory) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், தேவையான மருத்துவப் பரிசோதனைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், சுகாதாரக் கல்வி மற்றும் நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு உயர்தர மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், ஏராளமான பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் பங்கேற்று மருத்துவ சேவைகளைப் பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்வில்
Lions மாவட்ட ஆளுநர் Lion Shahir Ahamed PMJF, PMAF மற்றும்
மாவட்டமுதலாவது ஆளுநர் ஆளுநர் Lion T. Atithan PMJF, PMAF ஆகியோர் கலந்து
கொண்டனர். மேலும், Lions நிர்வாக உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து
கொண்டனர்
விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் Lions Club of
Batticaloa Lady Stars for Humanity அமைப்பினால்பரிசுகள் வழங்கி
கௌரவித்தனர்
சமூக நலன் மற்றும் மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் மருத்துவ முகாம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அனைவராலும் பாராட்டப்பட்டது.
























































