நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த விபத்துகள் காரணமாகக் கடுமையான காயங்களுக்குள்ளாகி 4,556 பேரும், சிறிய விபத்துகள் காரணமாக 7,295 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 3,232 சொத்துச் சேதங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 617 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 576 பாதசாரிகளும், 139 வாகன ஓட்டுநர்களும், 173 பயணிகளும், 122 மோட்டார் சைக்கிள் பின் இருக்கை பயணிகளும் மற்றும் 119 மிதிவண்டி ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





