நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரித்து வழக்குத் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் 2 ஆண்டுகளால் உயர்த்தவும், தலைமை நீதியரசரின் பதவிக் காலத்தை 7 ஆண்டுகள் அல்லது 67 வயது வரை எனத் திருத்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.





