மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம்









வரதன் 



மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு அவர்கள் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்கு பற்றுதலுடன் கள விஜயம் இன்று (08) மேற்கொள்ளப்பட்டது.

விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்திய வளங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

கண்டியனாறு குளம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் 600 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்களில் இருபோக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் மூலம் இப்பகுதி விவசாயிகளின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என இங்கு சுட்டிக் காட்டட்டட்டது.

இவ் விஜயத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கோபாலப்பிள்ளை, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு  பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்டத்தின் விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.