கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதுமான மட்டக்களப்பு அமிர்தகழி ஶ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவப் பெருவிழா மிகச் சிறப்பாக நடை பெற்று வருகின்றது
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆகஸ்ட் 3ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டு, மூலவர் சர்வ அலங்கார பூஷிதராக அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் இசைக்க, அரோகரா கோஷத்துடன் மாமாங்கேஸ்வரப் பெருமான் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தாய் தந்தையரானா பரமசிவன்- பார்வதி முருகப்பெருமான் சமேதராக வள்ளி தெய்வானையுடன் வெளி வீதி உலா வந்தனர்.



.jpeg)
.jpeg)




.jpeg)


.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)






