ரூ. 120 குடிநீர் போத்தலை ரூ. 200க்கு விற்ற உணவகத்திற்கு ரூ. 9.5 லட்சம் அபராதம்!

 


 

 நிரணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உணவகம் ஒன்றுக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் 950,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் யாழ். மாவட்டப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட 1 லீட்டர் குடிநீர் போத்தல் ஒன்று வாடிக்கையாளருக்கு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரி களால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. சட்டவிரோத வணிக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் நுகர்வோர் விவகார அதிகார சபை இத்தகைய சோதனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், நுகர்வோர் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.