கிளிநொச்சி
பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட
06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக
நபர்களான டிப்பர் வாகன சாரதிகள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத
மணலை கொண்டு செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களின் ஐந்து டிப்பர் வாகனங்களும் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில்
கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





