உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட புதிய டெங்கு தடுப்பூசித் திட்டம் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

 


டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது உலகளவில் 41 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட புதிய டெங்கு தடுப்பூசித் திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு முட்டை உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் வழக்கமான துப்புரவுப் பணிகளுக்கு மேலதிகமாக, இந்தத் தடுப்பூசித் திட்டம் இலங்கைக்குள் கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன், டெங்கு மசுற்கள் பெருகுவதைத் தடுக்கும் மற்றொரு அதிநவீன உயிரியல் தொழில்நுட்ப முறையான 'வொல்பாக்கியா' (Wolbachia) பாக்டீரியா முறையையும் இலங்கையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.