மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் பதவியேற்பு.




















#சிவகுமார்.M

 

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்கள் இன்று (01) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த எட்டு வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்ற திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களின் இடத்திற்கு, சுகாதார அமைச்சினால் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்கள் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை வளாகத்திற்கு வருகை தந்த புதிய பணிப்பாளருக்கு, வாசலில் வைத்து மாலை அணிவித்து, பெண் உத்தியோகத்தர்களால் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுக்கப்பட்டு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் பணிப்பாளர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைத்திலி பாத்லட், சிரேஷ்ட மருத்துவர்கள், துறைசார் உயர்திகாரிகள் மற்றும் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.