மட்டக்களப்பு கல்லடி ஒளவை யார் சிலை முற்றத்தில் நடைபெற்ற ‘ஒளவை விழாவில் நடன அரங்கேற்றம்

 

 



 






மட்டக்களப்பின் பிரபல வர்த்தக குழுமமான வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில்,கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஒழுங்குபடுத்தலில்,கல்லடிப் பால அவ்வை சிலை முற்றத்தில் ‘அவ்வை அவை’ நடத்திய ‘ஒளவை விழா - 2026’மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய மங்கள நிகழ்வான குத்துவிளக்கேற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து இறை வணக்கம்,கதிரவன் கீதம் மற்றும் வரவேற்புரை என்பன இடம்பெற்றன.

நிகழ்வின் சிறப்பம்சமாக,மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி நாட்டிய பயிற்சி நிலையமாகப் பல வருடங்களாக இயங்கி,நூற்றுக்கணக்கான பரத நாட்டியக் கலைஞர்களை உருவாக்கிய ‘கலாசாதனாலயா நாட்டிய கலாலயம்’ மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

நாட்டிய கலாலயத்தின் நிறுவுனரும் நடன ஆசிரியருமான திருமதி வாசுகி பார்த்தீபன் அவர்களின் நெறியாள்கையில் இந்த நடனம் அரங்கேறியது.இதில் நாட்டியப்பள்ளி மாணவிகளான:

  • கிருஷ்ணகாந்தன் யதுர்ஷனா
  • சிவசங்கர் ஷேஷரா
  • ஐங்கரதாஸ் குகாரணி
  • இராஜ்குமார் தனிஷ்ரா
  • கமலநாதன் யுகேஷ்மி
  • மஞ்சரகோபன் சுஜர்ணா
  • மயூரதன் அபிஷனா

ஆகியோர் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி,வருகை தந்திருந்தோரின் மனங்களைக் கவர்ந்தனர்.

மாணவிகளின் இந்தச் சிறப்பான நடனப்  விழாவிற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள்,வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டு கல்விமான்கள் எனப் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
நிகழ்வின் நிறைவில்,நடனத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கும்,அவர்களைச் சிறப்பாக நெறிப்படுத்திய நடன ஆசிரியை திருமதி வாசுகி பார்த்தீபன் அவர்களுக்கும்,மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் 

முதல்வர் T சரவணபவன்சான்றிதழ்களும்,புத்தகப் பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


.