மட்டக்களப்பில் மனிதாபிமான மனித உரிமைகள் அலுவலக திறப்பு விழா மற்றும் 'குளோபல் விஷன்' கலாச்சார விருது வழங்கல்!

 
































































































SIVAKUMAR.M

 மட்டக்களப்பில் சனிக்கிழமை (2026.06.20) கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கௌரவ Umar Haththab Mohamed Abdullah அவர்களால் மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் பொதுமக்கள் சேவை மையத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு, மட்டக்களப்பு கல்லடி சர்வதேச உளவியல் சார்ந்த கற்கைகள் நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் உள சமூக ஆதரவு மையமும் இதன்போது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு கல்லடி 'கிரீன் கார்டன்' ஹோட்டல் பிரதான மண்டபத்தில் குளோபல் விஷன் கலாச்சார விருதுகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக ஆரம்பமானது. பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மும்மதங்களையும் சேர்ந்த ஆன்மீக பெரியார்களின் ஆசீர்வாத சொற்பொழிவுகள் பக்திப்பூர்வமாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நலவாழ்வுக் கலைகள் சங்கத்தின் தலைவரும் கௌரவ பணிப்பாளர் நாயகமுமாகிய சமர ஸ்ரீ ததல்லகே அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் யு.கே.எம். அப்துல்லா மற்றும் மட்டக்களப்பு பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் மோகனகுமார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
சிறப்பு ஆன்மீக விருந்தினர்களாக:
 அம்பிட்டியே சுமனரத்ன தேரர் (ஸ்ரீ மங்களராம ராஜ மகா விகாரை, மட்டக்களப்பு  அருத்தந்தை ஏ. ஜேசுதாசன் பாதிரியார் (நாவற்குடா சின்ன லூர்து ஆலயம்)
   மௌலவி எம்.என். ருஷைத் ரஹ்மான் (பலாஹி) (தலைமை இமாம், ஜாமியுஸ் சலாம் ஜும்மா மஸ்ஜித், மட்டக்களப்பு)
   கிரியாதிலகம் சிவஸ்ரீ பால சதீஸ் குமார் குருக்கள் (சித்தி விநாயகர் ஆலயம், கல்லடி, மட்டக்களப்பு  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
      

வரவேற்பு நடனத்துடன் இனிதே ஆரம்பமான விருது வழங்கும் விழாவில், சமூகவியல், உளவியல் மற்றும் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சிறப்பான சேவையாற்றிய 07 ஆளுமைகளுக்கு விழாவுக்கு வருகை தந்த அதிதிகளால் உயரிய கலாச்சார விருதான 'தேச பந்து' கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பில் இணைந்த 42 புதிய அங்கத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நிகழ்வில் கலந்துகொண்ட ஆன்மீக அதிதிகளுக்கும் சிறப்பு நினைவுச்சின்னங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
இறுதியாக, Stephine அவர்களின் நன்றியுரையுடன் இந்த பிரம்மாண்ட கௌரவிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.