மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா
எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டின்
பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள்,
கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில்,
மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு பயணத்தையும் அதன் கல்வி மற்றும் சமூக
சேவைகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இராமகிருஷ்ண
மிஷன் மாணவர் இல்லம் கடந்த நூறு ஆண்டுகளாக எண்ணற்ற மாணவர்களுக்கு கல்வி,
ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்கி சமூக முன்னேற்றத்திற்கு
பெரும் பங்காற்றி வருகின்றது.
இந்நூற்றாண்டு
விழாவில் முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், நலவிரும்பிகள் மற்றும்
பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு இராமகிருஷ்ண
மிஷன் மட்டக்களப்பின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் அழைப்பு
விடுத்துள்ளார்.
( வி.ரி.சகாதேவராஜா)






