மட்டக்களப்பு கல்லடி - உப்போடை , நொச்சிமுனை அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவ கொடியேற்றம் -2026

 


 

























































SIVAKUMAR



மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில்  எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா, கடந்த 13.06.2026 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு சுபவேளையில் பக்திப் பூர்வமாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய தர்மகத்தா க.. வேலுப்பிள்ளை குடும்பத்தினரின் உபயத்தில் இந்த  கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மஹோற்சவ காலங்களில் தினசரி முற்பகல் 10.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், மாலை 6.00 மணிக்கு யாக பூஜைகளுடன் ஆரம்பமாகி இரவுத் திருவிழாக்களும் பக்திமயமாக நடைபெறவிருக்கின்றன.

இவ்விழாவில் கிராமத்து பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறும் விசேட திருவிழாக்களின் விபரம் பின்வருமாறு:

    17.06.2026 (புதன்கிழமை): 2ம் குறிச்சி பொதுமக்களின் உபயத்தில் சிறப்பு மாம்பழத்திருவிழா.

    18.06.2026 (வியாழக்கிழமை): 3ம் குறிச்சி பொதுமக்களின் ஏற்பாட்டில் பக்திபூர்வமான திருவிளக்கு பூஜை.

    19.06.2026 (வெள்ளிக்கிழமை): 4ம் குறிச்சி பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறும் வசந்த உற்சவம்.

    20.06.2026 (சனிக்கிழமை): 5ம் குறிச்சி பொதுமக்களால் நடாத்தப்படும் திருவேட்டை திருவிழா.

    21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை): 1ம் குறிச்சி பொதுமக்களின் ஏற்பாட்டில் ஆலயத்தின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டமும், தீமிதிப்பு உற்சவமும் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன.

    22.06.2026 (திங்கட்கிழமை): அதிகாலை வேளையில் பெருமானின் தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்று மஹோற்சவம் நிறைவுபெறும்.


ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக வசந்த நாத குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவத் திருவிழா நிகழ்வுகளும் விசேட பூஜைகளும் முறைப்படி  நடைபெறவுள்ளன.

இவ்வுயர்ந்த ஆன்மீக விழாவில் சைவ அடியார்கள் அனைவரும் குடும்பசகிதம் வருகை தந்து, எம்பெருமான் ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவருளையும் பேராசியையும் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.