மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேசிய சுற்றுலா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்

 




































 











SIVAKUMAR.M


மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியில் தேசிய சுற்றுலா வாரத்தை முன்னிட்டு, மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட விழிப்புணர்வு நாடகம் மற்றும் செயற்திட்டம் நேற்று  (09.06.2026) செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திரு. S. தருமதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, "சூழல் சுத்தம் பேணுவோம், சுகமாக வாழுவோம், ஆரோக்கிய உணவு உட்கொள்வோம்" எனும் மகுடவாக்கியத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

 பாடசாலை வளாக முன்றலில் திரண்ட மாணவிகள், டெங்கு நோய் பரவலைத் தடுப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, உணவகங்களில் விற்கப்படும் துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவுகளை உட்கொள்வதன் அவசியம் குறித்தும் நாடகம் மூலம் விளக்கினர்; குறிப்பாக, வெளி உணவுகளை உண்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் பாடல்கள் ஊடாக மாணவர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.

 இந்த விழிப்புணர்வு நாடகமானது மட்டக்களப்பு கல்வியற்கல்லூரி நாடக அரங்கியல் துறை விரிவுரையாளர் மற்றும் கல்வியற்கல்லூரி நாடக அரங்கியல் பயிலுனர் ஆசிரியர்களால் திறம்பட நெறியாள்கை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர்கள், சுகாதார மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், நாடக அரங்கியல் பாட ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினர். தேசிய சுற்றுலா வாரத்தை முன்னிட்டு சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை மாணவர்களிடையே கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக இது அமைந்தது.