2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு.

 


2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஓகஸ்ட் 9ஆம் திகதி பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதற்கான விண்ணப்பங்களை   ஏப்ரல் 30 வரை இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.