மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழக பிராந்திய மைய உதவிப் பணிப்பாளராக திருமதி விமலேந்திரன் கங்கா நிரந்தர நியமனம்!

 

 






இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய மைய உதவிப் பணிப்பாளராக (Assistant Director) திருமதி விமலேந்திரன் கங்கா அவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் நிரந்தர நியமனத்தின் கீழ் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, மட்டக்குளியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நளின் ரத்நாயக்க (Prof. Nalin Ratnayake) அவர்களினால் இந்நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

அவரது கல்வித் தகுதி, தொழில்முறை அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறன்களுக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாக இந்நியமனம் அமைந்துள்ளது.

அவர் தனது புதிய பதவியில் சிறப்புடன் பணியாற்றி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் தேடித்தர எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.